செப் 20/2013: தமிழகத்தில் பெரியார் வழியில், கம்யூனிசம் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்களில் ஒருவராக அறியப்படுபவர் தோழர் மருதையன்.
அவரது தலைமையில் இயங்கும் மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பாக காவி பயங்கரவாதி, கொலைகார மோடியே தமிழகத்திற்குள் நுழையாதே!
நரேந்திர மோடியை விரட்டி அடிப்போம்! என்கிற கோஷத்தோடு செப்டம்பர் 22 – ஞாயிறு மாலை 6 மணிக்கு சித்ரா காம்ப்ளக்ஸ் எதிரில், சத்திரம் திருச்சியில் மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம் ல் நடக்க இருக்கிறது.
பிரதமர் கனவுகளை சுமந்தபடி வரும் 26-ம் தேதி திருச்சிக்கு வருகிறார் நரபலி நரேந்திர மோடி. அடுத்த பிரதமர் மோடி என்கிற பிரச்சாரம் பத்திரிகை மற்றும் தொலைகாட்சிகளால் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இதை செய்வதற்காக பாரதிய ஜனதா ஒரு குழுவை அமைத்து பெரும் பணத்தை செலவிட்டு வருகின்றனர்.

குஜராத்தில், 2002 ஆம் ஆண்டு பயங்கர படுகொலைகளை திட்டமிட்டு நடத்தி 5000 க்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்களை இனபடுகொலை செய்தவர்தான் இந்த மோடி. அதற்கு சாட்சியாக இருந்த ஹரேன் பாண்டியா என்ற தனது சக அமைச்சரையே படுகொலை செய்தவர் இவர். -இந்து பாசிசத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் முக்கிய தலைவர்களுள் ஒருவர் இந்துத்துவாவை குஜராத்தில் சோதித்து வெற்றி கண்டவர்.
ஆர்.எஸ்.எஸ் கும்பல் 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் அரங்கேற்றிய படுகொலைகளுக்கு மூலகர்த்தா மோடி தான் என சஞ்சீவ் பட் என்கிற ஐ.பி.எஸ். போலீஸ் அதிகாரி அம்பலப்படுத்தினார்.. படுகொலை உத்திரவுகளை நிறைவேற்றிய போலீஸ் அதிகாரி வன்சாரா நரேந்திர மோடி பிரதமர் பதவியில் இருக்க வேண்டியவர் அல்ல, சபர்மதி சிறைச்சாலையில் இருக்க வேண்டியவர் என்று தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னரும் மோடியை உத்தமர் என்றும், அவர் தான் நாட்டை காக்கக் கூடிய வல்லமை பெற்றவர் என்று சொல்பவர்களை மனித நேயமற்ற, மனசாட்சி இல்லாத கொடியவர்கள் என்று சொல்லலாம்.

தமிழகத்தில் மோடியின் முகமூடியை அணிந்து வளர்ச்சி, வல்லரசு வாய்ச் சவடாலுடன் செல்வாக்கு பெற முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பலை வீழ்த்த வேண்டியது இன்றை அவசர கடமையாகும். திராவிட இயக்கத்தை விமர்சிப்பது என்னும் பெயரில் தந்தை பெரியார் உருவாக்கிய மதச்சார்பற்ற பண்பாட்டை சீர்குலைக்க நடத்தப்படும் சதிக்கு எதிராக மக்களாகிய நாம் வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட வேண்டும்.. பாஜக, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து மதவெறி பாசிச கும்பலை வீழ்த்துவதன் மூலம் மறுகாலனியாக்கத்தையும் முறியடிக்க அணி திரள்வோம்.
1 comment:
ok ok
Post a Comment