Apr 7, 2013

கொடிய மிருகங்களின் கைகளில் வேட்டை துப்பாக்கி!

ஏப்ரல் 08: கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த போலி என்கவுண்டர்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். 

போர் நடக்கவில்லை, தீவிரவாத தாக்குதல்கள் நடக்கவில்லை அப்படி இருக்க வேலியே (போலீஸ்) பயிரை (மக்களை) மேய்ந்திருக்கிறது. மனசாட்சியே இல்லாத மிருகங்கள் நிறைந்த துறைதான் போலீஸ் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் (2002 to 2007)  ஐந்து ஆண்டுகளில் மட்டும் 440 போலி என்கவுண்டர்கள் இந்திய பயங்கரவாத போலீசாரால் நிகழ்த்தப்பட்டுள்ளது   இதில் உத்திரபிரதேசத்தில் மட்டும் 231 போலி என்கவுண்டர்கள் நடத்தப்பட்டுள்ளன. தேசிய மனித உரிமை அமைப்பான NHRC ரிகார்டுகள் படி 2008 to 2009 வரை ஒரு ஆண்டுகளில் மட்டும் 369 போலி என்கவுண்டர்கள் நடத்தப்பட்டுள்ளன                       . 

இப்படி போலீசாரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட என்கவுண்டர்களில் ஒன்றுதான் 1982 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள  மாதோபூர் கிராமத்தில் நடந்தது. இதில் 12 அப்பாவிகளும் ஒரு போலீஸ் அதிக்காரியும் கொல்லப்பட்டனர். இந்த போலி என்கவுண்டர் குறித்து சந்தேகம் வராமல் இருக்க சக போலிஸ் அதிகாரியான ஆர்.பி. சிங் என்பவரையும் கொன்றனர் போலீஸ் பயங்கரவாதிகள். ரவுடிகளோடு நடந்த சண்டையில் போலிஸ் அதிகாரி கொல்லப்பட்டதாக வழக்கை மூடினார்கள்.

கொல்லப்பட்ட ஆர்.பி. சிங்கின் மனைவி  தனது கணவரின் கொலையில் மர்மம் இருப்பதாக சொல்லி, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இவரது வழக்கை ஏற்று உச்ச நீதிமன்றம் இட்ட உத்தரவின் பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய  விசாரணையில் இந்த வழக்கில் 19 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டதில் 10 பேர் இறந்து விட்டனர்.
 
இந்நிலையில், 31 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்தவாரம் தீர்ப்புக் கூறப்பட்டது. அதில் கவ்டியா காவல்நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த ஆர்.பி.சரோஜ், தலைமைக் காவலர் ராம் நாயக், காவலர் ராம் கரண் ஆகியோருக்கு இச்சதிச் செயலில் தொடர்புள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் தொடர்புடைய 5 காவலர்களுக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பு: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டமிட்டதாக மும்பையை சேர்ந்த இர்ஷாத் ஜஹான் என்ற கல்லூரி மாணவி உள்பட 4 பேரை 2004ம் ஆண்டு ஜூன் மாதம் அகமதாபாத் போலீசார் பதவி உயர்வுக்காக போலி என்கவுன்டர் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

*இந்திய வரலாற்றில் போலி என்கவுன்டர்களுக்கு எதிரான வழங்கப்பட்ட  முதல் தண்டனை  இதுதான்*

3 comments:

Anonymous said...

பயங்கரவாத தடுப்பு, கிரிமினல் குற்றத் தடுப்பு என்ற பொய் முகாந்திரங்களை வைத்து மக்கள் மீதான கண்காணிப்பை அதிகரித்து வருகின்றன, மத்தியமாநில அரசுகள்

Anonymous said...

மோடி எல்லாம் ஏமாற்றி ஓட்டு வாங்கி குஜராத் போல ரத்தக் களறியாக நாடு முழுவதும் ஆக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர் . நரியின் பண்பு வெளியே வரும் . அதற்க்கு ஏற்ற்வாரு பத்திரிக்கைகளும் முடிவுசெய்து ள்ளனர்

Anonymous said...

மோடி எல்லாம் ஏமாற்றி ஓட்டு வாங்கி குஜராத் போல ரத்தக் களறியாக நாடு முழுவதும் ஆக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர் . நரியின் பண்பு வெளியே வரும் . அதற்க்கு ஏற்ற்வாரு பத்திரிக்கைகளும் முடிவுசெய்து ள்ளனர் என்ன சொன்னாலும் மக்கள் எதையும் மறக்க மாட்டார்கள் .