Apr 6, 2013

கருணாநிதிக்கு கிடைத்த சாட்டையடி!

ஏப்ரல் 07/2013: உண்மையைச் சொல்லி நன்மை செய்ய நினைக்கட்டும். அதைவிடுத்து அ.தி.மு.க. எதிர்ப்பு அரசியல் நடத்த வேண்டாம் என்று கருணாநிதிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் உதயகுமார்.

தமிழக மக்களின் நலன்களை மனதில் நிறுத்தி, அவர்களின் கோரிக்கைளுக்கு முன்னுரிமை கொடுத்து தனது கட்சியின் நிலையை அதற்கேற்றவாறு மறுபரிசீலனை செய்து, தேவைப்பட்டால் மாற்றியமைத்து உண்மை தன்மையுடன் கருத்து சொல்வதற்குப் பதிலாக கருணாநிதி வழக்கம் போல் அ.தி.மு.க. எதிர்ப்பு அரசியல் செய்து கொண்டிருப்பதைக் கண்டிக்கிறோம்.

தமிழக அரசு தனது நிலையை மாற்றிக்கொண்டபோது நாங்கள் அதை எதிர்த்தோம். அன்றைய முதல் மத்திய அரசுடன் தமிழக அரசையும் சேர்த்தே  எதிர்த்து போராடி வருகிறோம். தமிழர்களின் வாழ்வாதாரங்களை அழிக்கிற, வாழ்வுரிமையை மறுக்கிற, தரமற்ற உபகரணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப பிரச்னைகள், சிக்கல்கள் நிறைந்த கூடங்குளம் அணு உலை தமிழகத்திற்கு வேண்டாம் என்றுதான் போராடி வருகிறோம்.

ஆபத்து ஏற்படாமல் நடவடிக்கை எடுப்பது, உத்தரவாதம் அளிப்பது, ஆவன செய்வது, பேச்சு வார்த்தை நடத்துவது என அரசியல் செய்து தமிழ் மக்களை இன்னும் உபயோகிக்கலாம் எனும் அணுகு முறையைக் கைவிட்டு உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்ய தி.மு.க முயலட்டும் என்றார் கூடன்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் உதயகுமார்.

3 comments:

shiva said...

Nearly about 20,000 million rs was spent on this atomic power plant in koodamkulam.what was this Udayakumar doing until now?Was he dishwashing in USA.Now all of a sudden this came out and saying we dont want this plant.

maharajan said...

oh..God..this Shiva came and we are enlightened.(Whether he knows the people are opposing right from the beginning?)

Anonymous said...

from the first day they are protesting .... its 1989 i dont know whether shiva born or not but iam seeing SP udayakumar from that day .... please the whole story Mr.Shiva why Rajiv Gandhi stopped his trip to Kudankulam in 1989,and who is the CM of TN.