Mar 8, 2012

இந்தியாவின் மானம் சந்தி சிரிக்கிறது!

March 09: அமெரிக்காவில் இந்திய தூரக அதிகாரியாக பணிபுரிபவர் நீனா மல்கோத்ரா. இவர் கடந்த 2006  ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து வீட்டு வேலைகள் செய்ய சாந்தி என்கிற பெண்ணை அழைத்து வந்தார்.

அமெரிக்கா வந்ததும் அந்த பெண்ணின் பாஸ்போர்டை பறித்து வைத்துக்கொண்டார். அதுமட்டுமல்லாது அவருக்கு ஓய்வு கொடுக்காமல் தொடர்ந்து வேலை வாங்கினார். மேலும் அவருக்கு சரியான உணவும்,  தாங்கும் இடம் வசதியும் செய்து கொடுக்காமல் துன்புறுத்தியுள்ளார்.

இதுகுறித்து சாந்தி நியூயார்க் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்தார். இந்திய தூதரக அதிகாரிமேல் சுமத்தப்பட்ட குற்றம் நிருபிக்கப்பட்டு அவருக்கு 1 .5  மில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய்க்கு கிட்ட தட்ட 68 இலட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நியூயார்க் கோர்ட் தீர்பளித்துள்ளது.

இப்படியாக இந்தியாவின் தூதரக சேவை  உலகம் முழுவதும் நாறுகிறது. இந்தியாவின் கேவலமான தூதரக சேவை பற்றி கருத்து கேட்க வேண்டும் என்றால் அரபு நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்களை கேட்டால் தெரியும். ஆசியாவில் உள்ள நாடுகளில் செயல்படும் இந்திய தூரகங்களின் நிலைதான் இப்படி என்றால் ஐரோப்பாவில் இருக்கும் இந்திய தூதரங்கள் அதற்க்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை நிருபித்துள்ளனர்.

இந்தியாவில் பண்ணை முதலாளிகளும், பணக்காரர்களும் கூலித்தொழில் முதல் வீட்டு வேலை வரை ஏழை மக்களை கொடுமைபடுத்துகிறார்கள். இதையெல்லாம் கேட்க இந்தியாவில் எந்த சட்டமும் இல்லை. சமிபத்தில் வடநாட்டில் ரூ 300 திருப்பி கொடுக்க வேண்டும் என்பதற்காக கூலி தொழிலாளியின் கைகளை வெட்டியெடுத்த சம்பவம் இப்படி தினம் தினம் உழைக்கும் ஏழை எளிய மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் பெருகிக் கொண்டே போகிறது.  நிலைமை இப்படி இருக்க ஒரு கும்பல்  2020 இந்தியா வல்லரசாக மாறிவிடும் என்று மக்களை ஏமாற்றிவருகிறது.
நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.

13 comments:

தமிழ் மாறன் said...

//இந்தியாவில் பண்ணை முதலாளிகளும், பணக்காரர்களும் கூலித்தொழில் முதல் வீட்டு வேலை வரை ஏழை மக்களை கொடுமைபடுத்துகிறார்கள். இதையெல்லாம் கேட்க இந்தியாவில் எந்த சட்டமும் இல்லை.//

சட்டம் இருந்தும் அதை செயல்படுத்தும் நீதி நிர்வாகமோ, அரசு நிர்வாகமோ அங்கே இல்லை. பாபர் மசூதி வழக்கில் நீதியை சொல்லுங்கள் என்று அரை நூற்றாண்டுகளாக காத்திருந்தார்கள் சிறுபான்மை மக்கள் ஆனால் நமது நீதி துறை நம்பிக்கை அடிப்படையில் குரங்கு பிட்ச்சி கொடுத்த ரொட்டி துண்டு மாதிரி ஒரு தீர்ப்பு கொடுத்தார்களே அதில் இருந்து புரியவில்லையா தோழரே.

Seeni said...

ada paavikalaa!

ivanga thaan paditha" arivaalikalaa!?

Anonymous said...

eppa sirikkala ippa sirikkarththukku eppavum indhiyavapparththu sirikkiradhu sagajamdhane

ப.கந்தசாமி said...

அக்கிரமம், அநியாயம்.

Anonymous said...

கேவலனானவர்கள் நமது தூதரக அதிகாரிகள். இந்தியாவில் நமது தாலுகா, கிரமா அலுவுலகங்க்ளில் பிட்ச்சை எடுப்பர்களோ அதுபோல் வெளி நாடுகளில் கவுரவ பிட்ச்சை எடுக்கிறார்கள். இந்தியர்களுக்கு ஒரு உதவியும் செய்வது இல்லை. ஏழை இந்தியர்கள் போனால் எரிந்து விழுவது. அதே நல்ல பதவிகளில் இருப்பவர்கள் போனால் அவர்களோடு சந்தோசமாக சிரித்து பேசுவது. பார்டி, குடி என்று கூத்தடித்து கொண்டாட ஒரு தூதரக சேவை.

PUTHIYATHENRAL said...

வாருங்கள் தோழர் சீனி அவர்களே! உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

PUTHIYATHENRAL said...

வணக்கம் தமிழ் மாறன் சரியா சொன்னீங்கள்.

PUTHIYATHENRAL said...

வணக்கம் பழனி கந்தசாமி ஐயா. உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

HOTLINKSIN.COM திரட்டி said...

///இந்தியாவின் மானம் சந்தி சிரிக்கிறது!///

காலாகாலமா இதுதானே நடத்துக்கிட்டு இருக்குது...

Anonymous said...

நல்லபதிவு வாழ்த்துக்கள் தோழரே.... அன்புடன் ராஜா.

PUTHIYATHENRAL said...

http://www.hotlinksin.com said ... காலாகாலமா இதுதானே நடத்துக்கிட்டு இருக்குது..

உங்கள் வருக்கைக்கும் கருத்துக்களும் நன்றி தோழரே.

banti said...

-Good piece of information.

Anonymous said...

இந்தியாவின் மானம் சந்தி சிரித்தால் பாகிஸ்தானிகளுக்கு சந்தோஷம்!