March 11: சங்கரன்கோவில் தொகுதியில் 20 கிராமங்கள் அதிக பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப் பட்டுள்ளன. இதையொட்டி கூடுதலாக 16 செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் 18ம் தேதி நடைபெறுவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 242 வாக்குச்சாவடிகள் 118 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்து வருகின்றனர். மேலும் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 5 கம்பெனி துணை ராணுவம் நாளை வருகிறது.
சிந்திக்கவும்: உலக நாடுகளில் தேர்தல் என்றால் எந்த பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக நடக்கும் மக்கள் சந்தோசமாக வாக்களிப்பர். இந்தியாவில் என்னவென்றால் தேர்தல் என்றால் ஏதோ போர் நடப்பது போல் இருக்கிறது. ஏன்தான் தேர்தல் வருகிறதோ என்று மக்கள் அஞ்சும் அளவுக்கு ஒரு போர்க்காலம் போல் தேர்தல் காட்சி தருகிறது.
சிந்திக்கவும்: உலக நாடுகளில் தேர்தல் என்றால் எந்த பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக நடக்கும் மக்கள் சந்தோசமாக வாக்களிப்பர். இந்தியாவில் என்னவென்றால் தேர்தல் என்றால் ஏதோ போர் நடப்பது போல் இருக்கிறது. ஏன்தான் தேர்தல் வருகிறதோ என்று மக்கள் அஞ்சும் அளவுக்கு ஒரு போர்க்காலம் போல் தேர்தல் காட்சி தருகிறது.
சிறப்பு காவல்படைகலாம், இராணுவமாம், செக் போஸ்டுகலாம், என்ன நடக்கிறது இந்த நாட்டில். கோடிக்கணக்கில் மக்கள் வரி பணத்தை செலவழித்து நடத்தப்படும் தேர்தலின் மூலம் உருவாகும் அரசுகளை கவிழ்ப்பது, கட்சி விட்டு கட்சிதாவுவது, ரவுடிகளை வைத்து அரசியல் நடத்துவது என்று இவர்கள் போடும் ஜனநாயக கூத்துகளுக்கு அளவே இல்லை.
மதவாதம், ரவுடிசம், ஊழல், ஜாதி, போன்றவற்றின் மூலம் தேர்தல் களத்தை போர்களமாக மாற்றும் நடத்தும் கட்சிகளையும், அதற்க்கு துணைபோகும் ரவுடிகளையும், அரசு அதிகாரிகளையும், கட்சி பொறுப்பாளர்களையும் மீதும் பாரபட்சம் இல்லாமல் காடுமையான் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
9 comments:
சரியாக சொன்னீர்கள் ...
\போர்க்களமாக தான் இருக்கிறது .../
//சரியாக சொன்னீர்கள் ...
போர்க்களமாக தான் இருக்கிறது//
வணக்கம் தோழரே உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. சங்கரன் கோவில் ஒட்டு பதிவுதான் போர்க்களம் போல் நடக்கிறது நாமாவது அமைதியாக தமிழ் மணத்தில் உங்களுக்கு ஒரு ஓட்டு போடலாம் என்று பார்த்தால் உங்கள் பதிவில் தமிழ் மணம் ஓட்டு பட்டறையை பார்க்க முடியவில்லை.
unmaiyai sollideenga!
போர்க்களம் என்றால் போர் நடக்கும் இடம். அப்படிப்பார்த்தால் உங்கள் தலைப்புக்கு இதுதான் பொருள். `சங்கரன் கோயிலில் நடப்பது போரா? போர் நடக்கும் இடமா?`
போர் நடக்கும் இடம் எப்படி நடக்கும்?
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சீனி.
//போர்க்களம் என்றால் போர் நடக்கும் இடம். அப்படிப்பார்த்தால் உங்கள் தலைப்புக்கு இதுதான் பொருள். `சங்கரன் கோயிலில் நடப்பது போரா? போர் நடக்கும் இடமா?` போர் நடக்கும் இடம் எப்படி நடக்கும்?//
வணக்கம் அனானி அவர்களே..... சங்கரன் கோவிலில் நடக்கப்போவது தேர்தல் இல்லை..... அது ஒரு போர்களம் எப்படி இருக்குமோ அதுபோல் ராணுவமும், செக்போஸ்டுகளும் நிறைந்து காணப்படுவதால் அப்படி ஒரு தலைப்பு வைக்கப்பட்டது. மற்றபடி ஒன்றும் இல்லை.
போர்க்களத்தில் நடக்கும் தேர்தலாக இருக்குமோ...
தோழர் http://www.hotlinksin.com/ திரட்டியின் பட்டையை தங்கள் தளத்தில் நிறுவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
போர்க்களமாக இருக்கிறது என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை.
உங்கள் தலைப்பு பிழையானது என்றுதான் நான் கூறுகிறேன்.
சங்கரன்கோவிலில் நடப்பது தேர்தலா? போரா? என்று தலைப்பிட்டிருந்தால் தவறில்லை.
போர்க்களம் என்பது ஒரு இடத்தைக் குறிக்கும்.
போருக்கும் போர்க்களத்துக்கும் வேறுபாடு உண்டு.
தேர்தலை நடத்த இங்கு தலையை கொடுக்க வேண்டியிருக்குமோ?
Post a Comment