JULY 26, மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்திவரும் புலனாய்வு ஏஜன்சிகள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
புலனாய்வு ஏஜன்சிகளிடையே பிளவு தீவிர மடைந்துள்ளதை தொடர்ந்து தேசிய புலனாய்வு ஏஜன்சி குழுவினர் மும்பையிலிருந்து திரும்பிவிட்டனர்.
புலனாய்வு ஏஜன்சிகள் இடையே ஒருங்கிணைப்பு இல்லை எனக் குற்றஞ்சாட்டி என்.ஐ.ஏ குழு திரும்பி விட்டதாக கருதப்படுகிறது. 22 பேரின் மரணத்திற்கு காரணமான தொடர் குண்டுவெடிப்பைக் குறித்து விசாரணையை ஒருங்கிணைக்க மும்பை தாக்குதலின் பின்னணியில் உருவான என்.ஐ.ஏ அதிகாரிகள் மும்பைக்கு வருகைத் தந்தனர்.
ஆனால், மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ்ஸும், க்ரைம் ப்ராஞ்சும் தேசிய புலனாய்வு ஏஜன்சியுடன் ஒத்துழைக்க மறுத்துள்ளன. ஏ.டி.எஸ், என்.ஐ.ஏ அதிகாரிகள் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டு வழக்கை விசாரிக்க என்.ஐ.ஏவுக்கு விசாரணையை நிறைவுச்செய்ய முடியாது என ஏ.டி.எஸ் விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது.
மும்பை குண்டுவெடிப்பு விசாரணையில் இந்தியாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய ஹிந்துத்துவா இயக்கங்கள் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை இந்தியா முழுவதும் எழுந்துள்ளது. இதற்க்கு மும்பை மாநில புலனாய்வுத்துறை ஒத்துழைப்பு கொடுக்க மறுத்துள்ளது. இதனால் நேசனல் புலனாய்வுதுறைக்கும் மும்பை புலனாய்வு துறைக்கும் மத்தியில் கருத்துவேறுபாடு வந்துள்ளது.
4 comments:
என்னவாச்சு நல்லோர்களே! நல்ல உள்ளங்களுக்கு சொந்தக்காரர்களே!! அரசு அதிகாரிகளின், உண்மையை வெளிக்கொண்டுவரவேண்டிய புலனாய்வுத்துறை நீதித்துறை, காவல் துறை என்று எங்கு பார்க்கினும் இந்த இந்து பாசிச கொள்கைதான் வேரூன்றி இருக்கின்றது என்பதை இப்பொழுதாவது மனத்தில் இருத்திக்கொள்வீர்களா?
இந்தியாவின் மதச்சார்பின்மையின் வேஷம் களைய பெரிய அடைமழை ஒன்றும் தேவை இல்லை. சிறிய தூறலே போதும்.
(INDIA VIL NEETHIKKU KANKAL AVINTHUVITTANA)
பின்லேடனை பாகிஸ்தானுக்குள் ஒளித்து வைத்து கொண்டு, பாக் உளவு அமைப்பு பித்தலாட்டம் பண்ணின மாதிரி இருக்கு இது... எல்லா மதவாதிகளின் பித்தலாட்டமும் அப்படி தான் இருக்கும் போலும்.
பாகிஸ்தான் செய்தது தவறு என்றாலும் அது இரு வெளி நாடுகள் சம்பத்தப்பட்டது. ஆனால் இது உள்ளூர் home grown terror network அய்யா.
thameem
அன்புள்ள வாசகர்களே வணக்கம் கருத்து சொன்ன அனைவர்களுக்கும் நன்றி. நன்றி மீண்டும் வாருங்கள்! நட்புடன் ஆசிரியர் புதியதென்றல்.
Post a Comment