JULY 26, கோவை: இந்தியாவில் பின்பற்றப்படும் இயற்கை வேளாண்மை முறைகள் பற்றி ஆராய்ந்து ஆவணப்படுத்தும் லட்சியத்தோடு, கோவையைச் சேர்ந்த இரு இளைஞர்கள், இரு சக்கர வாகனத்தில் தேசிய சுற்றுப்பயணம் துவங்கியுள்ளனர்.
கோவை, சிங்கநல்லூரை சேர்ந்தவர் தீபன் (25); விஷுவல் கம்யூனிகேஷன் பட்டதாரி. திருப்பூரை சேர்ந்தவர் முத்துக்குமார் (25); சாப்ட்வேர் இன்ஜினியர். பள்ளித்தோழர்களான இருவரும் இயற்கை மற்றும் இயற்கை வேளாண்மை மீது, அதிக ஆர்வம் கொண்டவர்கள்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பின்பற்றப்படும் இயற்கை வேளாண்மை முறைகளை பற்றி ஆராய்ந்து, ஆவணப்படுத்தும் நோக்கத்தோடு, இரு சக்கர வாகனத்தில் இந்தியா முழுவதும் சுற்றி வர முடிவு செய்து, நேற்று காலை பயணத்தை துவங்கினர். இந்தியாவில் மற்ற மாநிலங்களில் எந்த மாதிரியான விவசாய முறைகளை பின்பற்றுகின்றனர்;
அங்கு இயற்கை வேளாண்மைக்கு வரவேற்பு இருக்கிறதா, என்பதை கள ஆய்வு செய்து வீடியோ ஆதாரமாகவும், எழுத்துப்பூர்வமாகவும் ஆவணப்படுத்த உள்ளோம். இந்த பயணத்துக்கு இரு சக்கர வாகனத்தை பயன்படுத்துகிறோம். 45 நாட்கள் தமிழகத்திலும், பின் கேரளா மற்றும் அங்கிருந்து மற்ற மாநிலங்களுக்கும் செல்ல திட்டமிட்டு இருக்கிறோம். திரும்பி வர இரண்டு ஆண்டுகள் ஆகும்.இவ்வாறு, தீபன் தெரிவித்தார்.
1 comment:
இயற்கை வேளாண்மை மீது இவ்வளவு பற்று
வைத்திருக்கும் இந்த இளைஞர்களுக்கு
முதலில் எனது பாராட்டுக்கள்.
அவர்களின் சுற்றுப்பயணம் நன்கு நிறைவேறி
வேளாண்மையில் ஒரு புதிய புரட்சி ஏற்பட
வாழ்த்துக்கள்.
Post a Comment