Jan 8, 2011

இராமன் தொடுத்த வழக்கு!! குரங்கு எழுதிய தீர்ப்பு!!!


பூட்டியிருந்த கோயிலின் கதவை பக்தர்களின் தரிசனத்துக்குத் திறந்து விடுவதற்கான உத்திரவை பிறப்பித்த அந்த நாளன்று, எனது நீதிமன்ற அறையின் மேற்கூரையில் கொடிமரத்தைப் பற்றியபடி ஒரு கருப்புக் குரங்கு அமர்ந்திருந்தது. அன்றைய தினம் தீர்ப்பு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த பைசலாபாத், அயோத்தி நகரங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அந்தக் குரங்குக்கு வேர்க்கடலை, பழம் முதலானவற்றைக் கொடுத்தனர். அந்தக் குரங்கோ அவற்றைத் தொடக்கூட இல்லை. மாலை 4.40 க்கு நான் தீர்ப்பைப் படித்தவுடன் அந்தக் குரங்கு அங்கிருந்து அகன்றது. பின்னர் எனது பாதுகாப்புக்காக வந்திருந்த மாவட்ட ஆட்சியரும், போலீசு கண்காணிப்பாளரும் என்னை எனது பங்களாவுக்கு அழைத்துச் சென்றனர். பார்த்தால், எனது பங்களாவின் தாழ்வாரத்தில் அமர்ந்திருக்கிறது அந்தக் குரங்கு. எனக்கு அச்சரியம் தாங்கமுடியவில்லை. நிச்சயமாக ஒரு தெய்வீக சக்திதான் அந்தக் குரங்கு என்பதை உணர்ந்து கொண்டு அதனை வணங்கினேன்.”

பாபர் மசூதிக்குள் 1949இல் திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட ராமன் சிலையை, இந்து பக்தர்களின் வழிபாட்டுக்குத் திறந்து விடும் உத்திரவை 1986இல் பிறப்பித்த பைசலாபாத் மாவட்ட நீதிபதி கே.எம்.பாண்டே, பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின், 1991இல் வெளியிட்ட தனது சுய சரிதையில் குறிப்பிட்டுள்ள சம்பவம் இது. செப், 30, 2010 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கூரையிலும் நிச்சயமாக அந்தக் கருங்குரங்கு இருந்திருக்க வேண்டும் என்பதை தீர்ப்பிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. எனினும் குரங்குகளின் எண்ணிக்கை ஒன்றா மூன்றா என்ற தெய்வீக உண்மை, பின்னாளில் இந்த நீதிபதிகள் சுயசரிதை எழுதும்போதுதான் நமக்குத் தெரியவரும்.

“ஒரு குறிப்பிட்ட இடம் யாருக்குச் சொந்தமானது” என்று தீர்மானிப்பதற்கான உரிமை மூல வழக்கில், பட்டா பத்திரம் போன்ற சான்றாதாரங்களைச் சார்ந்து நிற்காமல், அந்தக் குறிப்பிட்ட இடத்தில் இராமன் பிறந்ததாக இந்துக்கள் நம்புவதால், அவர்களுடைய நம்பிக்கையின் அடிப்படையில் அந்த இடத்தை இராமபிரானுக்குச் சொந்தமாக்குவதாகத் தீர்ப்பளித்திருக்கிறது அலகாபாத் உயர் நீதிமன்றம். ஒரு உரிமை மூல வழக்கில் மனுதாரரின் மத நம்பிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் அவருக்கு சொத்துரிமை வழங்கமுடியுமா என்பதுதான் அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக எழுப்பப் படும் மையமான கேள்வி. மனுதாரரின் நம்பிக்கை கிடக்கட்டும். நீதிபதியின் நம்பிக்கைதான் 1986 தீர்ப்பையே தீர்மானித்திருக்கின்றது என்பதையல்லவோ குரங்கு கதை நமக்குக் காட்டுகிறது!

நன்றி: வினவு. நன்றி தோழர் மருதையன்.

2 comments:

vanjoor said...

CLICK BELOW AND SEE VIDEO.

http://vanjoor-vanjoor.blogspot.com/2010/12/video.html>அயோத்தி பாப்ரிம‌சூதி தீர்ப்பு கட்டப்பஞ்சாயத்து, நாட்டாண்மை தீர்ப்பை விட படுகேவலமானது. அயோத்தியில் ராமர் கோயிலே இடிக்கப்படவில்லை. ஏனென்றால் அயோத்தியில் ராமர் கோயில் என்று ஒன்று இருந்ததே இல்லை. இல்லாத கோயிலை சொல்லி இருந்த மசூதியை இடித்தார்கள். ராமர் பெயரை சொல்லி நாட்டிலே கலவரத்தை தூண்டுவதே குறிக்கோள்.

பாபர் மஸ்ஜித் நீதியை தேடும் பயணங்கள் - உரை: பேரா. அருணன். - தலைவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம்.

VANJOOR said...

முஸ்லீம்க‌ளின் அவ‌ல‌நிலை. VIDEO

அப்பட்டமான உண்மைகள். கண்ணீரில் முஸ்லீம் சமூகம்: “விடியுமா? தெரியல வேதனை தீரல‌”

இஸ்லாமியர்கள் தேவைக்கு அதிகமான சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என பொய்யுரைக்கப்பட்டு இருளில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.

சமூக நீதி என்னும் வெளிச்சத்துக்காக‌ ஏங்கி காத்து கொண்டிருக்கும் இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

மற்ற எவரையும் விட இந்த மண்ணின் மீது உரிமை கொண்டாட தகுதி படைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.

நாட்டிற்காக‌ சகல பணிகளிலும்தியாகங்களிலும் பங்கேற்ற இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

உடலை உருக்கி உதிரம் பெறுக்கி இந்திய மண்ணுக்கு தந்த‌ இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

நாட்டின் சுதந்திரத்துக்காக தங்களின் சுகங்களை அன்று இருளாக்கி கொண்டு போராடிவிட்டு இன்னும் இருளிலே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

வெள்ளையர் சமூகத்தை வீரத்துடன் விரட்டி அடித்து விட்டு இன்னும் கருப்பாக‌ வாழ்ந்து கொண்டிருக்கும்
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

முதலில் பாகிஸ்தானுடன் யுத்தம் வந்தபோது போரிலே முன்னிலையில் நின்று நாட்டிற்காக முதலில் உயிர் இழந்தது ஒரு இந்திய முஸ்லீம் என்ற‌ மறைக்கப்பட்ட மறக்கபட்ட ஒரு வரலாறு படைத்த‌ இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

இந்த நாட்டை இன்னொரு நாட்டுக்கு விட்டு கொடுத்திராத‌ இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

2 பாட்டல் சாராயத்துக்காக நாட்டின் இராணுவ ரகசியங்களை விற்றவர்களில்லை இந்திய‌ முஸ்லீம் சமுதாயம் .

நாட்டில் கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் புறந்தள்ளப்படும் இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.

அரசியல் அதிகாரத்திலும் அதளபாதாளத்திலேயே இருக்கும் இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

முஸ்லீம் சமுதாயத்தின் விகிதாச்சாரப்படி நாடாளும் மன்றத்திலும் சட்டமன்றங்களிலும் உரிய பிரதிநுத்துவம் இதுவரையிலும் கிடைத்திராத‌
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

நாட்டில் 20 சதவிகிதத்திற்கு மேலாக‌ முஸ்லீம் சமுதாயத்தினர் வாழும் நிலையில் அரசின் புள்ளி விபரங்களோ 13 சதவிகிதத்தினரே இருப்பதாக கூறுப்படும் இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

அந்த கணக்குபடி பார்த்தாலும் 540 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 60 முஸ்லீம் உறுப்பினர்கள் இருக்கவேண்டும். இது நிறைவு பெறாத‌
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களில் 30 முஸ்லீம் உறுப்பினர்கள் இருக்கவேண்டும். ஆனால் இதுவரை இந்த தொகை இருந்திராத‌
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.

இன்று சமூக பொருளாதார கல்வி நிலையில் தாழ்த்தப்ப‌ட்ட மக்களை விட மோசமான நிலையில் முகமிழந்து தன் முகவரி இழந்து வாழ்வுரிமை வினாக்குறியாகி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வீதியில் அழுது கொண்டு நிற்கும் இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

இடஒதுக்கீட்டை பொறுத்த வரையில் அது முஸ்லீம்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமை என்பது உண்மை என்ற நிலையில் இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.

CLICK AND SEE VIDEO

ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் தயாரிப்பான‌ 'பிறப்புரிமை' Documentary Film .