JULY 27, டெஹரான்: ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வததற்கான பாக்கி தொகை 8 பில்லியன் டாலரை இந்தியா செலுத்ததாத காரணத்தால் மேலும் கச்சா எண்ணெய் விற்பனை செய்வதை ஈரான் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ஈரானிமிடருந்து இந்தியா தேவையான கச்சா எண்ணெயினை இறக்குமதிசெய்து வந்தது.
இதற்கான தொகையினை தொடர்நது செலுத்தி வைத்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஈரானுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை 8 பில்லியன் டாலரை இந்தியா செலுத்தாத காரணத்தால் தற்காகலிமாக கச்சா எண்ணெய் விற்பனை செய்வதை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து ஈரான் எரிசக்தி கமிஷன்
துறையின் செய்தி தொடர்பாளர் ஈமாத்-ஹூசைனி கூறியதாவது: ஏற்கனவே இந்தியா 7.9 பில்லியன் டாலர் அளவுக்கு கச்சா எண்ணெய் ஈரானிடமிருந்து வாங்கியுள்ளது. இவற்றில் 4.08 பில்லியன் டாலர் மட்டுமே செலுத்தியுள்ளது. மீதமுள்ள தொகையினை செலுத்தினால் மட்டுமே தொடர்ந்து எண்ணெய் சப்ளை செய்யப்படும். அந்த வகையில் சீனாவும் ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குகிறது. ஆனால் அதற்கான தொகையினை முறையாக செலுத்தி வருகிறது என்றார்.
1 comment:
எவ்வளவுதான் கடன்கொடுப்பாங்க
அளவு இருக்கு இல்லையா??!!!
Post a Comment