May 20, 2011

சரித்திரம் திரும்புமா?

தி மு க தலைவர் கருணாநிதி அவர்களுக்கு: அன்று தமிழருக்காக குரல் கொடுத்தீர்கள் கட்சியும் வளர்ந்தது, தங்களும் வளர்ந்தீர்கள், உங்கள் குடும்பமும் வளர்ந்தது.

சமூக நீதிக்காக குரல் கொடுத்தாய், தீண்டாமையே எதிர்த்த காரணத்தினால் ஜாதி வெறியர்களின் எதிர்ப்பை சம்பாதித்தாய், ஹிந்தியை எதிர்த்தாய், பிற்படுத்தப்பட்ட மக்கள்ளுக்காக குரல் கொடுத்தாய்!

பெரியாரின் வழியில் ஹிந்துத்துவா பாசிஸ்டுகளை எதிர்த்தாய், ஈழத்தமிழருக்காக குரல் கொடுத்தாய், இதெல்லாம் நீ செய்யும் போது வெற்றி மேல் வெற்றி பெற்றாய்.

நீ பெற்ற வெற்றி குறிப்பாக ஹிந்துத்துவா பாசிஸ்டுகளின் கோபத்தை கிளறியது. அப்போதெல்லாம் தேர்தலில் நீ வெற்றியும் ,தோல்வியும், கண்டிருக்கிறாய் ஆனால் கேவலபடவில்லை!

என்று நீ கொள்கையில் இருந்து மாறி குடும்பத்திற்காக ஹிந்துத்துவா பாசிஸ்டுகளுடன் கூட்டணி வைத்தாயோ? அன்றிலிருந்து உன்னுடைய கேவலம் தொடங்கிவிட்டது.

பதிமூன்று வருடகாலம் நீ எதிர்க்கட்சி தலைவராக இருந்தாய் MGR ஆட்சியில் உன்னை தொடுவதற்கு யாருக்கும் தைரியம் வரவில்லை. ஏன்? சதிகாரர்கள் அன்று உன்னுடன் இல்லை! ஆனால் இன்று நீ சதிகாரர்களின் சகலப்படியாக மாறிவிட்டாய் .

ஒன்றை நினைவில் வைத்துக்கொள்! ஹிந்த்துதுவா பாசிஸ்டுகள் என்றுமே தாழ்த்தப்பட்டவர்களை வாழ விடமாட்டார்கள்! இது நான் சொல்லித்தான் உனக்கு தெரிய வேண்டும் என்றில்லை. என்றாலும் ஒரு சின்ன உதாரணம்:

கோடி கோடியாக ஊழல் செய்த ஜெயலலிதா, பாபர் மஸ்ஜித் இடித்த அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அரஸ்ட் வாரன்ட் கோர்ட் கொடுத்ததும் அரஸ்ட் செய்யப்படாத பால்தாக்கரே, மனித குலவிரோதி நரேந்திரமோடி,
ISI யிடம் பணம் பெற்று இந்தியா முழுவதும் குண்டு வெடிப்புகளை நடத்தி பாமர முஸ்லிம், ஹிந்து மக்களை வீரோதிகளாக மாற்ற முயற்சித்த RSS தலைவர்கள்,

இவர்கள் எல்லாம் வெளியில்! இந்த 2 ஜி ஸ்பெக்ட்ராம் ஊழலை தொடக்கி வைத்த BJP தலைவர்களும், அருண் சொறியும் வெளியில்
!
ஏன் என்றால் அவர்கள் உயர் ஜாதி.
ஏதோ எல்லா அரசியல்வாதிகளும் செய்வதை போல் செய்த உன் குடுப்பத்திற்கு மட்டும் ஜெயில். சமூகத்தில் தாழ்த்த பட்டவர்களையும், முஸ்லிம்களையும், ஏழைகளையும் அரஸ்ட் பண்ணுவதற்காக, மட்டுமே வாரன்ட் தயாரிப்பதற்கு உயர் ஜாதி பார்பனர்களின் கோர்ட் .

இனியும் காலம் கடந்து விடவில்லை. உயர் ஜாதி ஹிந்துத்துவா வெறியர்களின் அநீதிர்க்கு எதிரான போரை தொடங்கு! தமிழர்களும், முஸ்லிம்களும் ,தாழ்த்தப்பட்டவர்களும், உன்னுடன் நிற்ப்பார்கள், உன் வெற்றி உறுதி! நிச்சயம்!!

உன்னால் பாதிக்கப்பட்ட ஈழதமிழர்களின் குடும்பங்கள், கோயம்புத்தூர் குடும்பங்கள் இவர்களின் ஆத்மா சாந்தி அடையவேண்டும் என்றால், என்றும் இவர்களுக்கும், உனக்கும் எதிரியான ஹிந்துவா சக்திகளையும், சிங்கள பேரினவாதத்தையும் எதிர்த்து போராடு.

பெரியார் தொடக்கி வைத்த போரை மீண்டும் தொடங்கு இல்லையென்றால்! பாசிஸ்டுகள் மக்களையும், உன் குடும்பத்தையும் கேவலபடுதிவிடுவார்கள் .
மறந்து விடாதே! அன்று ஹிந்துத்துவா பயங்கரவாதி வாஜ்பேய் ஆட்சி செய்யும் போது நீ அவாள்களின் கூட்டணியில் தான் இருந்தாய்! அன்றும் நீ கைது செய்யப்பட்டாய்.நீ காங்கிரசின் கூட்டணியில் தான் இருக்கிறாய் இன்று உன் குடும்பமே தீஹாரை நோக்கி. பாசிஸ்டுகளின் பாசறைகள் சந்தோஷத்தில்! தமிழர்களோ சங்கடத்தில்! இன்றும்
ஒன்றை நினைவில் வைத்துகொள்! நல்லவர்கள் ஒரு நாளும் ஹிந்துத்துவாவுடன் சேரமாட்டார்கள்
!
தவறை திருத்து
தமிழர்களின் பக்கம் திரும்பு!!!!

5 comments:

Anonymous said...

நல்ல சிந்தனை. நல்ல கருத்தாக்கம். ஆனால் இதுபோன்றவற்றை கருணாநிதியின் காதில் விழ வைக்க மாட்டார்களே. MOHAMED THAMEEM

Anonymous said...

ரொம்ப நல்ல பதிவு தோழரே!! வாழ்த்துக்கள்.

Anonymous said...

காரியம் முடிந்தது இப்போ காங்கிரஸ் காலை வாரிவிட்டது. ஈழத் தமிழருக்கு செய்த துரோகங்களுக்கு இவருக்கு இன்னும் நிறைய படவேண்டி இருக்கு.

Anonymous said...

ஈழத்தை துக்கவீடாக மாற்றினார். இப்போ கனிமொழி கைதால் அவர் வீடு துக்க வீட மாறிவிட்டது.

Anonymous said...

karunaanithikku intha thandanai vendum. avaraavathu thirunthuvathaavathu.