![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitgWNr6Tl9KZ320u6GAdMW8R9Ui4DzdbUPyLNBomS7-nZaP8OjJGX1Pqrxe3D1iHiM5YMl0Z_2P1O5IR5tQqstPeRjbLm05JKkwPNL5lp6I4olGIhieCVqQU1arEC_Kuez6-RUFo7L90g/s200/un-secu.jpg)
"கவுன்சிலில் இடம் பெறுவதற்கான தகுதி இந்தியாவுக்கு இல்லை' என, ஐ.நா., செயல்பாடுகளை கண்காணித்து வரும் அமைப்பு ஒன்று விமர்சித்துள்ளது.
கடந்த, 2006ல் உருவாக்கப்பட்ட ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சில், 47 உறுப்பு நாடுகளைக் கொண்டது.
ஆசியாவுக்கான 14 இடங்களுக்கான நாடுகள் நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டன. ஆசியா பிரிவில், இந்தியா, 181 ஓட்டுகளும், இந்தோனேசியா, 184 ஓட்டுகளும், பிலிப்பைன்ஸ், 183 ஓட்டுகளும், குவைத், 166 ஓட்டுகளையும் பெற்றன.
கடந்த இருமாதங்களாக நடக்கும் மக்கள் எழுச்சி காரணமாக, சிரியா அரசின் வன்முறை ஏவல் உலக நாடுகளின் கண்டனத்துக்கு ஆளானது. அதனால், இக்கவுன்சிலில் இருந்த சிரியாவுக்குரிய இடம் குவைத்துக்கு தரப்பட்டது.
இந்தியாவுக்கு தகுதி உண்டா? சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் இயங்கி வரும் ஐ.நா.,வின் செயல்பாடுகளை கண்காணிக்கும் அமைப்பான "ஐ.நா., கண்காணிப்பு', "மனித உரிமைகள் கவுன்சிலில் இடம் பெறுவதற்கான தகுதிகள் இந்தியாவிடம் இருக்கின்றனவா என்பது சந்தேகம்தான்' என்று கூறியுள்ளது.
இந்தியா உலகில் மனித உரிமை அதிகம் மீறப்படும் நாடுகளில் ஒன்று. இங்கு சிறுபான்மை மக்கள் அதிக அளவில் இனக்கலவரங்கள் மூலம் அழிக்கப்பட்டுள்ளனர். அதை இந்தியா மறைத்து, அந்நாட்டு அரசின் சமீபத்திய அரசியல் சீர்திருத்தங்களை முன்னிறுத்தி உள்ளது.
ஐ.நா.,வுக்கான இந்திய துணைத் தூதர் இதுகுறித்து அளித்த பதிலில், "இதை ஒப்புக் கொள்ள முடியாது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இந்தத் தேர்வு, உலக நாடுகளின் தேர்வு' என குறிப்பிட்டுள்ளார்.
ஈழத்திலே பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட ஆயுதஉதவி செய்து, போரை மறைமுகமாக முன்னின்று நடத்தியவர்கள். ராஜபக்சே எப்படி போர் குற்றவாளியோ அதுபோல் இந்தியாவும்தான்.
No comments:
Post a Comment