![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJ2B-FzG9looFI627cwis6ItSMPupzokfTEnz_CX73NZLsGUQgNCepG2GpmJdfv63mBbyiWSf_bw6icdQ8bYcD0rMs7ZDhVoXS91rxQQT5IWFaGoNU2w_l6juwtQ3cnCp3MLKIflgTaFI/s200/untitled.bmp)
மலையாளத் திரைப்படங்களிலும் கூட மம்மூட்டி மோகன்லால் வகையறாக்கள் சி.பி.ஐ அதிகாரிகளாகத் தோன்றி உள்ளூர் போலீசால் கண்டே பிடிக்கமுடியாத பல்வேறு சிக்கலான வழக்குகளைத் தீர்த்துக் கொடுத்திருப்பார்கள்.
இப்படியாக சி.பி.ஐ பற்றிய ஒரு பயங்கரமான இமேஜும், அவர்களின் விசாரணையின் மேல் மக்களிடையே ஒரு நம்பிக்கையையும் பல ஆண்டுகளாகவே திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் நடைமுறையில் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்பதுதான் உண்மை.
1995-ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மேற்குவங்க மாநிலம் புரூலியா மாவட்டத்தில் திடீர் என்று ஒரு மர்ம விமானத்தில் வந்த சிலர் ஆயுத மூட்டைகளைப் போட்டனர்.
இது அந்த சமயத்தில் அம்மாநிலத்தில் அதிகாரத்திலிருந்த சி.பி.எம் கட்சியை எதிர்த்துப் போராட ஆனந்த மார்க்கம் என்கிற ஹிந்துத்துவா தீவிரவாத சாமியார் கும்பலுக்குத் தான் அந்த ஆயுதங்கள் போடப்பட்டன.
மற்றொரு முறை இவர்கள் ஆயுதங்கள் போட வரும் போது அவர்களை மடக்கிய சி.பி.ஐ அதிகாரிகள், அதில் பயணம் செய்த விமானக் குழுவினரையும் ஆயுத வியாபாரி பீட்டர் ப்லீச் மற்றும் ஆயுதக் கடத்தலின் சூத்ரதாரியான நீல்ஸ் க்ரிஸ்டியன் நீல்ஸன் என்கிற கிம் டேவியையும் கைது செய்தது.
கைது செய்யப்பட்டவர்களில் கிம் டேவி ‘மர்மமான’ முறையில் தப்பியோடி விட்டான் என்று சொன்ன சி.பி.ஐ, அவனைத் தேடி உலகெல்லாம் ஆட்களை அனுப்பிக் கொண்டிருந்தது. ஆனால் அவன் உண்மையில் தப்பி ஓடவில்லை அவனை நேப்பாளம் வழியாக வழியனுப்பி வைத்ததே இந்த சூரபுளிகல்தான்.
ஏன் இவர்களே வழியனுப்பி வைத்து விட்டு பின்னர் தேடுகிறார்களே என்று கேட்கிறீர்களா? தப்பியோடிய குற்றவாளியை உலகம் முழுவதும் தேடுகிறோம் பேர்வழி என்று குடிமக்கள் வரி பணத்தில் உலகை சுற்றி பார்க்கத்தான். இப்படி பெரும் புகழுக்கு சொந்தக்காரர்கள்தான் இவர்கள்.
இந்நிலையில் கையிலிருக்கும் பீட்டர் ப்ளீச்சையாவது விசாரித்து தண்டித்திருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் அதுதான் நடக்கவில்லை, அவருக்கு ஜனாதிபதியின் மன்னிப்பை வாங்கிக் கொடுத்து பத்திரமாக வழியனுப்பி வைத்தார்கள்.
ஃபோபார்ஸ் முதல் ரிலையன்சு வரை பல்வேறு ஊழல் வழக்குகளில் குற்றவாளிகளையும், முதலாளிகளையும் காப்பாற்றிய நிறுவனம்தான் இந்த சி.பி.ஐ., ஆட்சிக்கு எதிரானவர்களைக் கண்காணிப்பது, மிரட்டுவது என்பதற்காகவே பயன்படுத்தப்படும் கருவிதான் சி.பி.ஐ.
1 comment:
ஒண்ணுமே புரியலே... உலகத்திலே. என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது. MOHAMED THAMEEM
Post a Comment