May 26, 2011

பேரினவாதம் நீதிக்கு அப்பாற்பட்டதா!!

May 26, சகோதரி யாழினி! கண்ணீர் மல்கிக்கொண்டிருக்கிறேன். கவலை கொள்ளாதீர்கள். அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டி நிற்பது நம்மின் கடமை.

எப்படி துடித்திருக்கும் தமிழீழ மக்களின் இதயங்கள். கண் முன்னே அந்தக்காட்சிகள் நிழலாடுகின்றன. வானத்திலேசண்டை விமானங்களின், ஹெலிகாப்டர்களின் சத்தங்கள்.

தரையிலே சிங்கள இனக் கயவர்களின் துப்பாக்கி சத்தங்கள். பிஞ்சுக்குழந்தைகளை இருக்க அணைத்துக்கொண்டு ஓடவும், ஒதுங்கவும் இடம் தெரியாமல் தாய்கள்.

தாயும், தந்தையும் சென்ற இடம் தெரியாமல் யாரிடம் சென்று அபயம் தேடுவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் சின்னஞ்சிறார்களின் காட்சி.

துப்பாக்கிய நீட்டிய சிங்கள துன் மார்க்கர்களின் கையில் கிட்டிய அபலை பெண்கள். கனரக ஆயுதங்களால் 50 ஆயிரத்திருக்கும் மேற்பட்ட மக்களை சிலதினங்களுக்குள் கொன்று குவித்த சிங்கள இரத்தக் காட்டேறிகள். நீதிக்கு தலைவனே! இம்மக்கள் விசயத்தில் நீதி செலுத்து.

அதுபோல் குஜராத்தில் கொல்லப்பட்டனரே, வீடுகளுக்குள் பூட்டி காஸ் சிலிண்டர்களை திறந்து எரித்து கரிக்கட்டையாக்கினரே அந்த உயிர்கள் எப்படித் துடித்திருக்கும்.

தனக்கு என்ன நடக்கிறது என்றுகூட தெரியாத வயிற்றிலிருந்த சிசுவை வயிறு கிழித்து எடுத்து ஈட்டியால் குத்தி நெருப்பில் வாட்டினானே. எப்படி செய்ய முடிந்தது?

நடந்த இந்த நிகழ்வை, மிருகங்கள் கூட அதிசயிக்கும் இப்படிப்பட்ட இவர்களை வழி நடத்துபவர் யார்? இவர்களுடன் பேசிச்சிரித்து, விருந்துண்டு, விழாக்களில் கலந்துகொண்டு, கூடி, குழவி.... எப்படி முடிகிறது இவர்களால்?

தன்னால் செய்விக்கப்பட்ட அந்த ஈவிரக்கமற்ற செயலை எப்படி இரசித்து, சிரித்து அசை போட்டு பார்க்க முடிகிறது இவர்களால்? இவர்களின் இந்த ஈனச்செயல்களை என்னவென்று சொல்வது.

ஒரிசாவிலே பால் மனம் மாறா பாலகர்களிருவரை தந்தையுடன் சேர்த்து வாகனத்தில் எரித்து கொன்றனரே! வாகனத்தினுள்ளே உறங்கிக்கொண்டிருந்த இரு குழந்தைகளும் வெப்பம் உணர்ந்து சிறு பட்சிகள்போல் பட படத்து வெளியேறத் துடித்த பொழுது,

அந்த வாகனத்தினுள்ளே தனக்கும் தன் அன்புக்குழந்தைகளுக்கும் நேரும் பயங்கரத்தை உணர்ந்து உடல் வேதனையும், தன் குழந்தைகளுக்கு நேரும் மரணத்தின் வலியை போக்க வெளியே பாயும் அந்த தகப்பனையும்,

சிறு குழந்தைகளையும் கோடாரிகளைக் கொண்டு தாக்கி வெளியேற விடாமல் உள்ளேயே சுட்டுப்போசுக்கிய அந்த பயங்கரவாதிகளைவிடவா வேறு பயங்கரவாதிகள் இந்த உலகத்தில் இருக்க முடியும்?

இனத்தின் பெயரால், மொழியின் பெயரால், மதத்தின் பெயரால், அரசுகளும், ஆள்பவர்களும் செய்யும் வன் கொடுமைக்கும், கொலைக்கும், சித்ரவதைக்கும் மனிதமுள்ள மக்கள்தான் முடிவு கட்டவேண்டும்.

பேரினவாதம் செய்யும் கொடுமைகளை இந்திய செய்தித்துறையும், பத்திரிகைத்துறையும் கண்டு கொள்ளக்கூடாதென்று சத்தியம் செய்து கொண்டது போல் தெரிகிறது. சுய உணர்வுள்ள ஒவ்வொரு தனி மனிதனும் இந்த அநியாயத்திற்கு பொறுப்பாவான்.

செய்தி குழுமங்களே! நீங்கள் பன்மையாய் இருக்கும் பட்சத்தில், உங்களின் தனி நபர் பொறுப்பு குறைந்து விடுமென்று வாலாதிருக்கவேண்டாம். அநியாயத்தை கண்டும், காணாதிருக்கும் நீங்கள் அநியாயத்திற்கு துணை போனவர்கள் ஆவீர்.

உங்களின் அநியாயத்திற்கு துணை போகும் பண்புக்கு பகரமாக உங்களின் குடும்ப வாழ்க்கையில் கூட இறைவன் நிம்மதி இல்லாமலாக்கலாம். அல்லது மற்றவருக்கு நடந்த அதே போன்ற அநியாயங்கள் சோதனையாக உங்கள் குடும்ப நபருக்கே விளைவிக்கப்படலாம்.

அநியாயங்களுக்கு எதிராக மக்களை ஓன்று திரட்ட வேண்டும். யாரும் யாரையும் அடக்கியாளக்கூடாது. தீரமிக்க, மனித நேயமிக்க நல்ல அரசுகள் வரவேண்டும். மனிதம் நிலைத்திருக்க வேண்டும். அநியாயம் செய்தது அரசே ஆனாலும் நீதியின் முன் நிறுத்தப் படவேண்டும். - MOHAMED THAMEEM

"யாழினியின் கருத்து பதிவாகிறது". என்ற பதிவுக்கு வாசகர் மிஸ்டர் தாமீம் எழுதிய கமன்ட் அது ஒரு பதிவு போல் நிறைய செய்திகளை தாங்கி நின்றதால், அவர்களது கருத்தும் ஒரு பதிவாக வாசகர்களுக்கு சமர்பிக்கப்படுகிறது. - அன்புடன் ஆசிரியர்: புதியதென்றல்.

2 comments:

Anonymous said...

சூப்பர் தலைவா, ஈழமக்களின் கண்ணீர் குறித்து பகிர்ந்ததற்கு ரொம்ப நன்றி.

Anonymous said...

சிங்கள பேரினவாத பிசாசுகள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே, அத்தோடு பேரினவாத பூதங்கள் அனைவர்களும் அழித்து ஒழிக்க படவேண்டியவர்களே.