May 26, 2011

பாபர் மசூதியும் பார்ப்பன வேட்டையும்!!

May 26, முஸ்லிம்களின் 450 வருடம் வரலாற்று பழமைவாய்ந்த பாபர் மஸ்ஜித் ஹிந்து வெறியர்களால் இடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அலஹாபாத் உயர் நீதி மன்றத்தின் (சிறுபிள்ளைத்தனமான) தீர்ப்பை உச்சநீதி மன்றமே கண்டித்தது.

உச்சநீதி மன்றம் நல்லதீர்ப்பு தரும் என்ற நம்பிக்கையில் முஸ்லிம்களும், நல்லெண்ணம் கொண்டவர்கள் நீதி தேவை என்று கருதுவதையும் நாம் அறிந்ததுதான்.

அப்போதைய அரசின் துரோகத்தையும், நடந்து முடிந்த பெருங்கோர நிகழ்ச்சியையும் நான் இங்கு நினைவுப்படுத்த காரணம் உண்டு.

சினிமா என்பது கலையையும், கலாச்சாரத்தையும் காட்டிய காலமெல்லாம் போய், வன்முறையையும், வக்கிரத்தையும் பிரதிபலிப்பதாய் இருக்கின்றன என்பதை நம் யாராலும் மறுக்க முடியாது.

ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன், திப்புசுல்த்தான், நேதாஜி, கப்பலோட்டிய தமிழன், பகத் சிங், போன்றவர்களின் கதாபாத்திரங்களை வைத்து எடுக்கப்பட்ட படங்களை இன்னும் நாம் ரசிக்கவே செய்கிறோம்.

அப்படங்கள் தேசபக்தியின் அடையாளங்களாகத் திகழ்ந்தன. அதுபோல் இந்தியில் வெளிவந்த அமீர்கானின் "தாரே ஜமீன் பர்" ஐ பார்த்து வியக்காதவர்கள் இல்லை.

நர்கீஸின் "மதர் இந்தியா" வை பார்த்துவிட்டு அழாமல் எழமுடியாது. படங்கள் எனப்பட்டவை உண்மையை, வாழ்வின் மென்மையை அச்சு அசலாக சொல்வதாய் இருக்கவேண்டும்.

அகிரா குரோசாவின் ஜப்பானிய திரைப்படங்கள் ஏன் சாதிக்கின்றன?. இந்நிலையில் பாப்ரி என்ற பெயரில் (பாபர் மசூதியை பற்றி) ஒரு படத்தை ஹிந்துத்துவா பால்தாக்ரேயின் மருமகள் சுமிதா தாக்ரே எடுப்பதாக செய்தியை படித்த பிறகு நமக்கு ஏற்படும் ஐயங்கள் ஏராளம்.

அவர் நடுநிலையோடு பாபர் மசூதியின் வரலாற்றை சொல்வதாக இருந்தால் வரவேற்கலாம். அதே நேரம் தாக்ரேயின் குடும்ப பின்னணியில் உள்ள ஒருவர் இந்தப்படத்தை எடுப்பதால் அது வகுப்புவாத சிந்தனை அற்றதாக இருக்கும் என்பதில் நமக்கு நம்பிக்கை இல்லை.

அரசியல் ஆதாயம் தேடுவோரும், சிறுபான்மையினரை சீண்டிப்பிழைப்பு நடத்துவோரும் வாய்ப்புக்காக காத்திருக்கும் இந்த தருணத்தில், இப்படம் மீண்டும் சர்ச்சையை கிளப்பி பெரும் கலவரங்களோடு ரத்த பலி கேட்க்குமோ ? .................................சிந்திப்போம் !!

4 comments:

Anonymous said...

நல்ல கருத்துக்கள், ஆழமான சிந்தனை வாழ்த்துக்கள்.

Anonymous said...

ஹிந்துத்துவா பயங்கரவாதம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் நல்ல பதிவு.

Anonymous said...

Beautiful blog design.

Congrats.

Anonymous said...

மதத்தை வைத்து அரசியல் ஆதாயம் அடைகிறது ஒருகூட்டம். மக்கள் விழிப்புணர்வு கொள்ளாதவரை இதை மாற்றுவது கடினம். இத்தோடு கூட மக்களுக்கு சினிமா மாயையும் பிடித்து ஆட்டுகிறது.