
1. நல்ல நேரம் - கெட்ட நேரம் என்கிற கருத்துக்களை பாபா நம்பவில்லை. மனதில் நல்ல நோக்கத்தோடு நல்ல செயலில் ஈடுபடும் எல்லா நேரமும் நல்ல நேரமே.
அதுபோல கெட்ட நோக்கில் கீழான காரியங்களில் ஈடுபடும் எல்லா நேரமும் கெட்ட நேரமே. எனவே, இராகுகாலம், எமகண்டம் எல்லாம் பார்ப்பது வீண் வேலை.
2. பூசை, யாகம் செய்வது, விரதம் இருப்பது, கோவிலுக்கு போவது, உண்டியலில் பணம் போடுவது போன்ற எல்லாமும் அவரவர் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவே செய்யப்படுகின்றன.
இதனாலெல்லாம் கடவுளை வசப்படுத்தவோ, காரியங்களை சாதிக்கவோ முடியாது. ஒரு மனிதன் சிறிதாக வழிபடுகிறானா, பெரிதாக வழிபாடுகளை நடத்துகிறானா? என்றெல்லாம் இறைவன் எதிர்பார்ப்பது இல்லை.
மனிதனால் இறைவனுக்கு எந்த ஒரு பொருளையும் கொடுக்க முடியாது. அன்பும் சகமனிதர்களை நேசிப்பதுமே இறவனை வழிபடும் ஒரே வழியாகும்.
3. கோவில் கட்டுவதற்காக ஒரு ரூபாய் கூட நன்கொடை அளிக்காதீர்.
4. இராமனுக்கு கோவில் கட்டுவதாகக் கூறி, இன்னொரு வழிபாட்டு தளத்தை இடிப்பது மூடச்செயல். அது உண்மை பக்தி அல்ல. இராமனுக்கு கோவில் கட்ட வேண்டுமானால், அவரவர் மனதில் கட்டுங்கள்.
5. பல ஆறுகள் ஒரே கடலில் கலப்பது போல - எல்லா மதங்களும் ஒரே கடவுளைத்தான் போதிக்கின்றன.
சாய் பாபாவின் சாதனை;
பார்ப்பனர் அல்லாத வகுப்பில் பிறந்து - இந்திய ஆன்மீகத்திலும் சேவையிலும் மிக உயர்ந்த நிலையை எட்டியவர் சாய் பாபா. சாதியை மட்டுமின்றி மதத்தையும் கடந்தவர். அன்பும் சேவையுமே லட்சியம் என வாழ்ந்தவர்.
பாபா ஒரு ஆன்மீக வாதியாகவே பார்க்கப்பட்டாலும் - அவரிடம் அளிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களைக் கொண்டு அவர் கோவில்களையோ மடங்களையோ எழுப்பவில்லை.
மருத்துவ மனைகள், கல்வி நிறுவனங்கள், குடிநீர்த் திட்டங்கள் என சமூக நலப்பணிகளுக்காகவே அவர் நிதியை செலவிட்டார்.
இந்தியாவின் ஜனாதிபதிகளும், பிரதமர்களும், பல மாநில முதல்வர்களும் அவரை நாடி வந்ததே வரலாறாக இருக்கையில் - சென்னையின் குடிநீர் தேவையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக நாத்திகரான கலைஞரை தேடிவந்தார் சாய் பாபா.
அத்திட்டத்திற்காக 200 கோடி ரூபாயை அளித்தார் அவர். சாய் பாபா ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி. ஆனால், அவர் உலகில் ஒருவருக்கும் கேடிழைத்தவர் அல்ல.
No comments:
Post a Comment