Apr 12, 2011

தேர்தலில் வன்முறையில் ஈடுபடுவோரை சுட உத்தரவு!!

ஏப்ரல் 13, தமிழக சட்டசபை தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடக்கிறது. மொத்தமுள்ள 234தொகுதிகளிலும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மொத்தமாக தமிழகம் முழுவதும் 4 கோடியே 71 லட்சத்து 16 ஆயிரத்து 687 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2 லட்சத்து 37 லட்சத்து 4 ஆயிரத்து 802 பேரும், பெண் வாக்காளர்கள் 2 லட்சத்து 34 லட்சத்து 10 ஆயிரத்து 716 பேரும், திருநங்கைகள் 1169 பேரும் இருக்கிறார்கள்.

இத்தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, இந்திய ஜனநாயக கட்சி, அஇசமக உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் கடந்த 19 நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இந்த அனல்பறக்கும் பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. தற்போது வாக்கு பதிவிற் கான ஏற்பாடுகளை தேர் தல் ஆணையம் செய்து வருகிறது. தமிழகம் முழுவதும் நாளை காலை ஓட்டு பதிவு நடக்கிறது. மொத்தமுள்ள 54,314 வாக்குச்சாடிகளுக்கு இன்று காலை மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

துணை ராணுவத்தினரின் பாதுகாப்பில் உள்ள வாக்கு இயந்திரத்தை யாராவது அபகரிக்க முயன்றாலோ, வன் முறையில் ஈடுபட முயன்றாலோ உடனடியாக சுட்டுத்தள்ள உத்தரவிடப் பட்டுள்ளது. தேர்தலை சுமூகமாக நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் அதிரடியாக பல்வேறு நடவடிக் கைகளை எடுத்துள்ளது.

No comments: