Apr 24, 2011

ஐ.நாவின் அறிக்கையை ஆதரித்து கையழுத்து வேட்டை!!

APRIL 24, ஐ.நாவின் அறிக்கைக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் கையெழுத்து வேட்டையை தொடங்கியுள்ள நிலையில், ஐநாவின் அறிக்கையை முன்னிறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் கையெழுத்து வேட்டையைத் தொடங்கவுள்ளது.

சிறிலங்காவின் போர்க் குற்றங்கள், மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழினப் படுகொலையை விசாரிக்க ஆணைக்குழு ஒன்றை அமைக்கவும், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் விசாரிக்க வேண்டியும் இந்த கையெழுத்து கோரப்படுகின்றது.

ஈழத்தமிழர்கள் வாழுகின்ற புலம்பெயர் நாடுகளிலும் மற்றும் தமிழகம், சிங்கப்பூர், மலேசியா, தென்னாபிரிக்கா உட்பட உலகத் தமிழர்களின் ஒன்றிணைக்கின்ற வகையில் இந்த கையெழுத்து வேட்டை இடம்பெறுமென தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் " இலங்கைத்தீவில் தமிழர்களுக்கான அரசியல்வெளி அறுபட்டு, அடக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கைத் தீவுக்கு வெளியே வாழுகின்ற தமிழர்களின் கைகளிலேயே இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை, சனநாயக ரீதியாக உலக அரங்கில் வெளிப்படுத்தி நிற்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், உலகப் பரப்பெங்கும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைத்து, இந்த கையெழுத்து வேட்டை நடாத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இதில் அனைவரையும் பங்கெடுக்க வேண்டப்பட்டுள்ளது.

அடுத்த வாரத்திற்குள் தொடங்கவுள்ள இந்தக் கையெழுத்து சேகரிப்பு, நிறைவில் ஐநா செயலாளர் நாயகம் பான் கி மூனிடம் கையளிக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

நாதம் ஊடகசேவை - தகவல்துறை அமைச்சகம் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

No comments: