Apr 24, 2011

குற்றாலம் அருவியிலே குளிப்பது போல் இருக்குமா!!

APRIL 24, குற்றாலம் அருவிகளில் ஆண்டுதோறும் மே மாத இறுதியில்தான் சீசன் தொடங்கும்.

அப்போது மிதமான வெயிலுடன், சாரல் மழைம் பெய்யும்.

அப்போது அருவிகளில் குளித்துமகிழ அண்டை மாநிலங்கள் மட்டுமன்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருவர்.

இந்நிலையில், குற்றால வனப் பகுதியில் சில நாள்களாக பரவலாக மழை பெய்கிறது. இதனால், அருவிகளில் தண்ணீர் கொட்டத் தொடங்கியுள்ளது.

கோடை மழை பெய்த முதல்நாளில் பேரருவியின் பாதுகாப்பு வளைவைத் தாண்டி சீறிப்பாய்ந்த நீரின் சீற்றம் படிப்படியாகக் குறைந்து இப்போது குளிப்பதற்கேற்ற அளவில் விழுகிறது.

குற்றாலம் பேரருவி, ஐந்தருவியின் 3 கிளைகளில் குறைந்த அளவில் தண்ணீர் விழுகிறது. இங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால் சீசன் தொடங்கும் முன்பே இந்த ஆண்டில் குற்றாலம் களை கட்டத் தொடங்கியுள்ளது. கோடை விடுமுறையென்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை அருவிப் பகுதியிலும், பூங்காக்களிலும் சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் திரண்டிருந்தனர்.

No comments: