Apr 12, 2011

அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு! சுவாமி அசீமானாந் மானு தள்ளுபடி!!

அஜ்மீர்: அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியும், சங்க பரிவார ஹிந்துத்துவ தீவிரவாதியுமான அசீமானந்தா மற்றும் அதற்கு துணையாக இருந்த பாரத் பாய் இருவரையும் அப்ரூவராக ஏற்றுக்கொள்ள அஜ்மீர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நேற்று நடந்த நீதிமன்ற விசாரணையில் இவ்விருவர்களால் கொடுக்கப்பட்ட அப்ரூவர் மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.எல்.முத்ஆல் மனுவை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

விசாரணையில் தாங்கள் குற்றவியல் விசாரணை அதிகாரிகளின் வற்புறுத்தலாலும் மற்றும் அவர்கள் கொடுத்த தாங்க முடியாத துன்பத்தினாலும் மட்டுமே அப்ரூவராக மாறுகிறோம் என்று அவர்கள் எழுதி இருந்ததாக கூறினர். இதனால் நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்த மிகப்பெரிய சதி திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் இந்த்ரேஷ் குமாருக்கும் முக்கிய பங்கு இருப்பதாக புலனாய்வுத்துறை ஏற்கனவே குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments: