புதுடில்லி : குஜராத் அரசுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தை, நேற்று பார்லிமென்டின் இரு சபைகளிலும் பாரதிய ஜனதா எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் நேற்று பிற்பகல் வரை சபை ஒத்திவைக்கப்பட்டது.
குஜராத்தில் தொழில் துவங்க வரும்படி பன்னாட்டு கம்பெனிகளை வரவேற்கும் வகையில், கடந்த சில மாதங்களுக்கு பின் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில், பன்னாட்டு நிறுவனங்கள், குஜராத்தில் தொழில் துவங்குவது குறித்து ஒப்பந்தம் செய்யப்பட்டது. 1,000 கோடி ரூபாய்க்கு மேலான இந்த ஒப்பந்தங்கள் குறித்து, விளக்கம் கேட்டு வருமான வரித்துறை குஜராத் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த விவகாரம் குறித்து, லோக்சபாவில் நேற்று கேள்வி நேரத்தின் போது, முன்னாள் பிரதமர் தேவகவுடா பிரச்னை கிளப்பினார். இதையடுத்து, பாரதிய ஜனதா உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு வந்து கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். சபாநாயகர் மீரா குமார் பலமுறை வேண்டுகோள் விடுத்தும், யாரும் கேட்கவில்லை. ஒரே அமளியாக இருந்ததால், சபையை பிற்பகல் 1 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
இதே விவகாரத்தை ராஜ்யசபாவிலும் எழுப்பியதால், அமளியான சூழ்நிலை நிலவியது. இதனால், பிற்பகல் வரை சபையை தலைவர் அன்சாரி ஒத்தி வைத்தார். பிற்பகலிலும் சபை கூடிய போது, அமளி தொடர்ந்ததால், சபை ஒத்திவைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, பிரதமர், நிதியமைச்சர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, பாரதிய ஜனதா உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment