ராமநாதபுரம் : சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் கட்ட பெயர் பட்டியலை கட்சியின் மாநில பொது செயலர் அப்துல் ஹமீது வெளியிட்டார்.
ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:எங்கள் கட்சியின் மாநில நிர்வாகக் குழு முடிவின் படி நான்கு மாநிலத்திலும் போட்டியிட தீர்மானித்துள்ளோம். தமிழகத்தில் 25 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்து முதல் கட்டமாக ஆறு தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சாகுல் ஹமீது - ராமநாதபுரம்; அமிர்ஹம்சா - சென்னை, துறைமுகம்; உமர் - கோவை, தொண்டாமுத்தூர்; முபாரக் திருநெல்வேலி, கடையநல்லூர்; தாரிக் - பூம்புகார்; பக்ருதீன் புதுச்சேரி, நிரவிதிருபட்டினம் போட்டியிடுகின்றனர். இவ்வாறு அப்துல் ஹமீது கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment