கொழும்பு, மார்ச் 9- இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி.,க்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை என்று ஸ்ரீதரன் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் மக்களின் பிரதிநிதிகளான எம்.பி.,க்களுக்கே இலங்கையில் பாதுகாப்பு இல்லாத நிலையில், தமிழ் மக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு கிடைக்கும் என்று அவர் நாடாளுமன்றத்தில் பேசுகையில் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஜோசப் ராஜசிங்கம், ரவிராஜ், சிவநேசன் ஆகிய தமிழ் எம்.பி.,க்கள் ஏற்கெனவே படுகொலை செய்யப்பட்டதையும் ஸ்ரீதரன் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார் திங்கள் கிழமையன்று, நொச்சியாகம அருகே காரில் வந்து கொண்டிருந்த போது ஸ்ரீதரன் எம்.பி. மீது சில மர்ம மனிதர்கள் கையெறி குண்டுகளை வீசினர். மேலும், அவரை நோக்கி துப்பாக்கியாலும் சுட்டனர். இதில், உயிர் தப்பிய அவர் அச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment