லண்டன்,மார்ச்.9:உலகில் மிகவும் உத்வேகமளிக்கும் பெண்களின் பட்டியலில் 5 இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.
'தி கார்டியன்' பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததிராய், மனித உரிமை ஆர்வலர் ஜெயஸ்ரீ ஸத்பூத், இக்கோ ஃபெமினிஸ்ட் வந்தனா சிவா, வைட் ரிப்பன் அலையன்ஸ் ஃபார் ஸேஃப் மதர்ஹுட் இன் இந்தியாவின் ஒருங்கிணைப்பாளர் அபராஜிதா கோகோய்,பெண் இயக்க ஊழியர் சம்பத் பல்தேவி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
சர்வதேச மகளிர் தினமான நேற்று கார்டியன் பத்திரிகை இப்பட்டியலை வெளியிட்டது.
இந்தியா வம்சாவழியைச் சார்ந்த பலரும் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். பெப்ஸி கோவின் தலைவர் இந்திரா, இயக்குநர் மீரா நாயர் ஆகியோரும் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
இந்தியாவின் சித்தாந்த கலந்துரையாடல்களின் பிறப்பிடம் என கார்டியன் பத்திரிகை அருந்ததிராயை பாராட்டியுள்ளது. 'தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்' என்ற நாவலை எழுதியவர், இரண்டாவது நாவலை எழுதுவதற்கு விருப்பங்கொள்ளாமல் இந்தியத் துணைக் கண்டத்தின் கறுப்பு பகுதிகளைக் குறித்து வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுவதில் முனைப்பாக உள்ளார் என கார்டியன் அருந்ததிராய் பற்றி கூறுகிறது.
சமூக ஆர்வலர்களின் பட்டியலில் சம்பத் பல்தேவி இடம்பிடித்துள்ளார். வட இந்தியாவில் 'குலாபி கேங்' என்ற அமைப்பை வழி நடத்துபவர் இவராவார். பிங்க் நிற சேலையும், மூங்கில் கம்புகளும் இவர்களின் அடையாளமாகும். வரதட்சணைக் கேட்டு துன்புறுத்தும் ஆண்களை அதே முறையில் திருப்பித் தாக்குவது என்பது 'குலாபி கேங்கின்' பாணியாகும். நிர்பந்தமாக நடத்தப்படும் திருமணங்களிலிருந்து தப்பி வரும் பெண்களுக்கு அடைக்கலம் அளிக்கும் 'ஸவுத் ஹால் ப்ளாக் சிஸ்டர்ஸ்' என்ற அமைப்பின் நிறுவன உறுப்பினரான பிரக்னா பட்டேலும் இந்த பட்டியலில் இடம்பிடிக்கிறார்.
சிந்திக்கவும்: நிச்சயமா இந்த பெண்களால் இந்தியா உலக அளவில் தலை நிமிர்ந்து நிற்கிறது. ஹிந்துவா பயங்கரவாதிகள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பல கலவரங்களை நடத்தி இந்தியாவின் பெயரை உலக அளவில் தலைகுனிவுக்கு ஆளாக்கி வந்தாலும் இது போன்ற மனித உரிமை போராளிகளால் சிலரால் இந்தியாவின் மானம் காக்கப்பட்டு வந்துள்ளது. அதுபோல் இந்திய அரசு பயங்கரவாததிற்கும் எதிராக அவர்கள் தொடர்ந்து போராடி வந்துள்ளார்கள் என்பதும் இந்நேரத்தில் நினைவு கூறத்தக்கது. அந்த வகையில் இவர்களை இந்தியாவின் வீர மங்கைகளாக நம்மால் பார்க்க முடிகிறது. அது போல் நமது தொப்புள் கொடி உறவுகள் ஆனா ஈழத்து தமிழ் பெண்கள் சிங்கள இன வெறியர்களோடு போர் புரிந்து என்றும் வரலாற்றில் காவியமாக திகழ்கிறார்கள். எகிப்து புரட்சிக்கு வித்திட்டவரும் ஒரு வீர மங்கைதான். பெண்கள் இதுபோன்ற எந்த செயல்களும் செய்யாவிட்டாலும் தாய்மை என்ற ஒரு சிறந்த பண்புக்காக அவர்கள் போற்றப்பட கூடியவர்கள். இருந்தும் இதுபோல் செயல்படும் வீர மங்கைகளை போற்றுவோம்! அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்கள்!!
அன்புடன்: ஆசிரியர் புதியதென்றல்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment