தாய்லாந்து நாட்டு பெண்களின் அழகும் அறிவும் உலகம் முழுதுமே அறிந்த விடயம். அவர்கள் எப்போதும் மகிழ்ச்சிகரமாகவும், வீரமுள்ள அதே சமயத்தில் மிக்க மென்மை ஆனவர்களாகவுமே காணப்படுவார்கள் கவர்ச்சியான பெண்கள் மட்டுமல்ல, அதீத பெண்மைத்தனமும் நிறைந்தவர்கள் அதிகமான வெட்கம் எப்போதும் இருக்கும் முகத்தில். சின்ன பேச்சோ, முக வாடுதலோ கூட அடுத்தவரை காயப்படுத்தி விடக்கூடாது என்பதில் மிக கவனமாயிருப்பார்கள்.
என் கஷ்டம் எனக்கு அதை நாந்தான் பார்த்துக்கொள்ளணும். உன்மேல் சுமத்தமாட்டேன். வெளிப்படுத்த கூட மாட்டேன். அதற்கு பதில் புன்னகைப்பேன். உன்னையும் புன்னகை செய்ய வைப்பேன். அப்படியே இந்த தொற்று ( வெட்கமும், சிரிப்பும் ) நாடு முழுதுமே நாம் பார்க்கலாம். அதீத பெண்மைத்தனம் என ஏன் சொல்லப்படுகிறார்கள் என்றால் மிக மென்மையான , மிருதுவான தோலும், மிக அழகிய, பட்டுப்போன்ற கருங்கூந்தலும் உடையவர்களாம்..ஆனால் பெண்மைக்கு இலக்கணமாய் இவற்றை சொன்னாலும், வீரத்தில் எள்ளளவும் குறைந்தவர்களில்லை. வீரம் காட்டும் விதமே வித்யாசமாயும். கடின உழைப்பின் மூலம் முன்னேறுபவர்களாகவும் இருக்கிறார்கள்..
தான் எதிர்பார்க்கும் மரியாதையை அடுத்தவருக்கு முந்திக்கொண்டு தருவதாலேயேயும் , முகம் சுழிக்க வேண்டிய விசயத்தையும் , அன்போடு எடுத்தாழும் வித்தையையும் உலகம் முழுதும் திரும்பிப்பார்க்க செய்த விசேட குணங்கள். எச்சூழலிலும் அனுசரித்தும் போகக்கூடியவர்கள்.. அதீத பொறுமையுமுண்டு. இவையெல்லாவற்றும் அடிப்படை அமைத்ததில் புத்த மதக் கொள்கைக்கும் பெரும் பங்குண்டு..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment