Mar 8, 2011

கிரிக்கெட் பேட்டுக்கு வந்த வாழ்வே! மாயம்!!

துபை, மார்ச் 7: பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் கையெழுத்திட்ட பேட் ரூ.8.5 லட்சத்துக்கு ஏலம் போனது.

பாகிஸ்தானில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டுவதற்காக துபையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த பேட் ஏலம் விடப்பட்டது. பேட் உள்பட மொத்தமாக இந்த நிகழ்ச்சி மூலம் ரூ.4.5 கோடி நிதி திரட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் உயர் கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சித் துறை அமைச்சர் ஷேக் பின் முபாரக், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஷெளகத் அஜிஸ், பாகிஸ்தானுக்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதர் என்ஜின் சோய்சல், இம்ரான் கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
.
பெங்களூர், மார்ச். 8- இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடிய அயர்லாந்து வீரர்களின் 6 பேட்டுக்கள் திருடு போய் உள்ளது. ஓட்டல் அறைக்கு திரும்பியபோது தான் பேட் திருட்டு போனதை அவர்கள் கண்டுபிடித்தனர். திருட்டு போன 6 பேட்டுகளை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

No comments: