
ரஜினிகாந்த் வருகிற தமிழக தேர்தலில் யாரை ஆதரிக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இலங்கை இறுதி போரில் தமிழர்கள் பல ஆயிர கணக்கில் கொல்லப்பட்டதால் தமிழர்கள் மத்தியில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க கூட்டணிக்கு பெரிய பின்னடைவு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. மற்றபடி ஜெயலலிதாவும் ஈழ தமிழர்கள் விசயத்தில் தொடர்ந்து எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்தவர் என்பது குறிப்பிட தக்கது. இந்த சூழலில் சீமான், மற்றும் வைகோ போன்றவர்கள் ஜெயலலிதா ஆதரவு நிலை எடுத்துள்ளார்கள். பா.ம.கா இன்னும் மதில் மீது பூனையாக இருக்கிறது. இந்த சூழலில் ரஜினிகாந்த் இந்த தேர்தலில் தமிழர் ஆதரவு கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்க போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் ஆ.தி.மு.கா கூட்டணிக்கோ அல்லது மூன்றாவது அணிக்கோ அதரவு கொடுப்பார் என்று தெரிகிறது. இந்நிலையில் திரை உலகை சேர்ந்த சீமான் ரஜினிகாந்தை சந்தித்து தமிழர் ஆதரவு நிலை எடுக்கும் படி வலியுறுத்தி வருவதாக சினிமாத்துறை வட்டாரங்கள் தெரிவிகின்றன. தமிழீழ மக்களை கொன்று குவிக்க மத்திய ஆளும் கட்சி ஆதரவு தெரிவித்ததால் அவர்களை எப்படியும் இந்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்ற இலட்சியத்தோடு ஈழ ஆதரவு கட்சிகள் செயல்படுவது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் ஈழ ஆதரவு நிலையெடுத்து வருங்கால சுதந்திர ஈழம் அமைய உறுதுணையாக இருக்கும் கட்சிக்குதான் ஆதரவு தெரிவிப்பார் என்று நம்பபடுகிறது.
1 comment:
i like it
-thmailan-
Post a Comment