Feb 14, 2011

புதுப்பட்டிணத்தில் இந்து முன்னணியினர் நடத்திய கலவரம்!! உண்மை செய்திகள்!!

பட்டுக்கோட்டை,பிப்.14:புதுப்பட்டினம் என்ற சிற்றூரில் ஜனவரி 28-ம் தேதியன்று இந்து முன்னனி சார்பில் அவ்வமைப்பின் கொடி ஒன்று பேருந்து நிலையம் அருகில் ஊன்றப்பட்டுள்ளது. பிப்.8 அன்று யாரோ விசக்கிருமிகள் அக்கொடியினை அறுத்து இருக்கின்றனர். இதை முஸ்லிம்கள் தான் செய்ததாக கூறி 8 முஸ்லிம்களின் பெயரை கூறி சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர் இந்து முன்னணியினர்.

பிப்.11 அன்று இப்பிரச்சனையை பற்றி பேசுவதற்காக முஸ்லிம்களின் தரப்பிலிருந்து ஜமாஅத் உறுப்பினர்கள் உட்பட சில நபர்கள் காவல் நிலையத்திற்கு வருகின்றனர், அதே சமயம் இந்துக்கள் சார்பில் கொஞ்சம் பேர் அங்கு வருகின்றனர். இன்ஸ்பெக்டர் இல்லாத காரணத்தால் சப்இன்ஸ்பெக்டர் ஹேமலதா அவர்கள் இரு தரப்பினரையும் சமாதானப் பேச்சில் ஈடுபடுத்துகின்றார்கள் முஸ்லிம்கள் தங்களது பக்கம் நியாயம் இருப்பதாகவும் இந்தப் பிரச்சனைக்கு முஸ்லிகள் யாரும் காரணம் இல்லையென்றும், வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்திருக்கும் பாலா என்ற இந்துத்துவவாதி இந்த ஊருக்கு திரும்பி வந்த பின்பு தான் இது போன்ற செயல்கள் நடப்பதாக தங்கள் நிலையை கூறியவுடன் அத்தனை பேரும் ஏற்றுக் கொண்டு சமாதான நிலைக்கு வருகின்றனர்.

அந்த சமயம், நெடு நாட்களாக முஸ்லிம்கள் ஜும் ஆப் பள்ளிக்கு எதிரில் இருக்கும் கோயில்களில் தொழுகை நேரத்தில் ஒலித்து வரும் பாடல்களை நிறுத்தக்கோரி கேட்டும் அதை தொடர்ந்து செய்து வருவதாகவும் எங்களது இறை வழிப்பாட்டிற்கு இடையூறாக இருப்பது பற்றி தீர்த்து வைக்கக் கோரினர்.

அப்பொழுது வேலு என்பவர், நாங்கள் பாட்டை நிற்பாட்ட முடியாது, நீங்கள் வேண்டுமானால் தொழுகையை நிற்பாட்டுங்கள் என்று கூற ஆரம்பித்ததும் , முஸ்லிம்களது மனம் பாதிக்கப்படுகிறது வந்திருந்த முஸ்லிம்கள் அனைவரும் கண்டனம் எழுப்புகின்றனர். நிலவரம் சரியில்லாமல் போவதைக் கண்ட காவல்துறையினர் பிப்.13 அன்று சமாதானக் கூட்டம் நடத்துவதாக அறிவித்து விட்டு அன்றைய கூட்டத்தை கலைத்து விடுகின்றனர்.முஸ்லிகள் அனைவரும் பிப்.13-ஐ எதிர்நோக்கி இருக்கும் பொழுது பாசிஸ்டுகளின் சதிவேலையின் இரண்டாம் கட்டம் ஆரம்பிக்கிறது. பிப்.11 அன்று இரவே இந்து மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லக் கூடாது எனறு இந்து முன்னணி சார்பில் தடை விதிக்கப்படுகின்றது.

பிப்.12 பகல் 3.00 மணி வரை ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை மக்கள் அனைவரும் அமைதியாக இருக்கின்றனர், அஸர் தொழுகை ஆரம்பிக்கும் நேரத்திற்கு சற்று முன்னர், ஒரு சுமோ, ஒரு கார் மற்றும் 5 அல்லது 6 பைக்குகளில் தம்பிக்கோட்டை, மற்றும் பட்டுக்கோட்டையில் இருந்து இந்து முன்னணியினர் புதுப்பட்டினம் வந்து சேருகின்றனர்.

முஸ்லிம்கள் எப்போதும் போல் அஸர் தொழுகைக்கு மஸ்ஜிதிற்கு சென்றுவிட்டு வெளியில் வருகையில் 50-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் மஸ்ஜிதிற்கு எதிரில் நின்று கொண்டு ஆபாசமான வார்த்தைகளைக் கொண்டு பழிக்கின்றனர். மேலும் முஸ்லிம்களின் மீது கல்வீசித் தாக்குதல் நடத்துகின்றனர். இதனை கண்ட சிறுவர்கள், முதியவர்கள், இளைஞர்கள் அனைவரும் இந்து முன்னணியினரை திருப்பித் தாக்குகின்றனர். இதில் முஸ்லிம்களின் தரப்பில் 5 பேரும் இந்து முன்னணி தரப்பில் 12 பேரும் காயம் அடைகின்றனர், இத்ரீஸ் அஹ்மது என்ற 11வது படிக்கும் மாணவரின் மண்டை எலும்பு உடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இவ்விசயம் அறிந்த காவல்துறை முஸ்லிம்களின் தரப்பில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 13 பேரை ரிமாண்ட் செய்துள்ளனர். இரண்டு பேரை தேடி வருகின்றனர். இந்து முன்னணி சார்பில் 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 10 பேரை ரிமாண்ட் செய்து 9 பேரை தேடி வருகின்றனர், வெளியூரில் இருந்து வந்த அத்தனை இந்து முன்னணியினரும் ஓடிப்போய் விட்டனர் என்பது நமது நிரூபர் அளிக்கும் தகவல். தற்பொழுது புதுப்பட்டினம் எஸ்.பி.-யின் மேற்பார்வையில் இருக்கிறது. ( செய்திகள் தூது நிரூபர் - புதுப்பட்டினம்).

நன்றி: செய்திகள் பாலைவன தூது.

No comments: