Feb 13, 2011

நடமாடும் பஞ்சர் கடை!! இந்த ஐடியா நால்லா இருக்கே!!

தர்மபுரியை அடுத்த தொப்பூரை சேர்ந்த மெக்கானிக் சவுகத்அலி கூறியதாவது: வாகனங்களில் செல்வோர் சாலைகளில் பஞ்சராகி, பஞ்சரை சரி செய்ய கடை தேடி அழைவதை பார்த்து, சேவை எண்ணத்தோடு நடமாடும் பஞ்சர் கடை துவங்கியுள்ளோம். குறைந்த கட்டணமே வசூலிக்கிறோம். 24 மணி நேரமும் எங்களை, மொபைல்போன் 99947 - 89647, 90428 - 46577 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால், அடுத்த சில நிமிடங்களில் நாங்கள் அங்கு இருப்போம், என்றார். இதற்காக தயார் செய்துள்ள வேனில் பஞ்சர் போடுவதற்கு உரிய அனைத்து பொருட்களையும் வைத்துள்ளனர். இரு சக்கர வாகனம் முதல் நான்கு சக்கர வாகனம் வரை, பஞ்சரானால், மொபைல்போனில் அழைத்தால் போதும், சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று பஞ்சர் போட்டு, வாகன ஓட்டிகளின் தேவையற்ற டென்ஷனை குறைத்து வருகின்றனர். தர்மபுரியை சுற்றியுள்ள, 15 கி.மீ., தூரத்துக்கு இவர்களது பயணம் அமைந்துள்ளது. நகரப்பகுதி மற்றும், 5 கி.மீ., தொலைக்குள் சென்று பஞ்சர் போட வேனில் சென்றாலும், டீசல் கட்டணம் வசூலிப்பதில்லை. 5 கி.மீ., தூரத்துக்கு மேல் என்றால், கி.மீ., ,3 ரூபாய் டீசல் கட்டணம் வசூலிக்கின்றனர். நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒரு பஞ்சருக்கு, 40 முதல் 50 ரூபாய் வரை, பஞ்சர் கட்டணமும், இரு சக்கர வாகனங்களுக்கு, 20ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர்.

No comments: