Feb 13, 2011

பாகிஸ்தானுடன் பேச்சு இல்லை : அமெரிக்கா!!

வாஷிங்டன் : பாகிஸ்தானில் தனது தூதரக அதிகாரி கைது செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா, பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை தள்ளி வைத்துள்ளது.பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றி வரும் ரேமண்ட் டேவிஸ் என்பவர், கடந்த ஜனவரி 27ம் தேதி, இரண்டு பாகிஸ்தானியர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். "தூதரக அதிகாரியை உடனடியாக விடுவிக்காவிட்டால், இரு தரப்பிலான உயர்மட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படும்; பாகிஸ்தானுக்கான நிதியுதவி ரத்து செய்யப்படும்' என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்து வந்தது. ஆனால், எதற்கும் பாக்.அசைந்து கொடுக்கவில்லை. இந்நிலையில், பாக்., ஆப்கன் மற்றும் அமெரிக்கா இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை, இம்மாதம் 23 மற்றும் 24ம் தேதிகளில் வாஷிங்டனில் நடக்க இருந்தது. இதுகுறித்து பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கிரவுலி, "பாகிஸ்தான் அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், முத்தரப்பு பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்படுகிறது. இதற்கு பாக்., மற்றும் ஆப்கன் அதிகாரிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர்' என்றார்.

No comments: