
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து தோழமைக் கட்சிகளுடன் பேச அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்து அறிவித்துள்ளார். இந்த குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் பெயர் இடம் பெறவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ஆதரவாளர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் வியாழன் அன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அப்போது ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். அப்போது ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ஆதரவாளர் ஒருவர் மண்ணெண்ணெயை தன் உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயச்சி செய்தபோது, அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து சமாதானப்படுத்தினர்
1 comment:
இவங்கல்லாம் சேந்துதான் அரசியலையே சாக்கடை ஆக்கிட்டாங்க.
Post a Comment