
தமிழக மீனவர்கள் படுகொலையைக் கண்டிக்கும் பொருட்டு, நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் ஆர்ப்பாட்டம் ஒன்றில் களம் இறங்கவுள்ளதாகத் தெரிய வருகிறது. தமிழக மீனவர்கள் மீது தொடர்ச்சியாகத் தாக்கும் இலங்கை கடற்படையின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையில், வரும் 22ம் தேதி நாகப்பட்டினத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அன்மையில் மரணமடைந்த மீனவர் ஜெயக்குமார் குடும்பத்துக்கு, அரசியற்கட்சித் தலைவர்கள் போட்டி போட்டுஉதவி வரும் நிலையில், பிரபல நடிகர் விஜய் வரும் 22ந் திகதி, ஜெயக்குமார் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவிருப்பதாகத் தெரிய வருகிறது. இவ்வாறு அங்கு வரும் போது ஏற்பாடு செய்யப்படும் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விஜயின் அரசியற் பிரவேசம் என்பது பிற் போடப்படடுள்ள நிலையில், மக்கள் நலன் நிகழ்வாக இவை தெரிவிக்கப்பட்டாலும், இது அவரது அரசியல் தொடர்பான ஒரு நகர்வாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவின் பிரச்சாரத்து விஜய் அழைக்கப்படலாம் என்ற பேச்சுக்கள் இருக்கும் நிலையில், திரையுலகப் பிரபலங்கள் எல்லாம் மீனவர் பிரச்சனையில் அமைதி காக்கையில், விஜய் தொடங்க நினைப்பதை, முழுமையான அரசியல் நிகழ்வாகக் கருத முடியாவிட்டாலும், ஒரு முன்னோட்டமாக கருத முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment