எகிப்தின் தலைநகர் கெய்ரோவில், மில்லியன் கணக்கான மக்கள் நேரடியாக முபாரக்கின் உரையை எதிர்பார்த்திருந்த போது, வியாழக்கிழமை நள்ளிரவு தேசிய தொலைக்காட்சியில் தோன்றிய முபாரக், தனது உரையை நிகழ்த்தினார். அவர் பதவி விலகுவது தொடர்பில் அறிவிப்பார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த போது, ஆர்ப்பாட்டக்காரர்களின் கோபத்தை அதிகப்படுத்தும் வகையில், இது தான் மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. எகிப்தின் கௌரவ பிரச்சினை. இந்நாட்டை கட்டியெழுப்ப மிகுந்த பாடுபட்டுள்ளேன். நான் இருந்தாலும், இறந்தாலும் இந்நாட்டில் தான்.
எனது அதிகாரங்களில் சிலவற்றை துணைஅதிபர் சுலைமானுக்கு கொடுக்கிறேன், எனினும் செப்டெம்பர் வரை எனது ஆட்சி பீடத்தில் நான் தொடர்ந்து இருப்பேன். என அறிவித்தார்.
இவ் அறிவிப்பால் மிகுந்த கோபமடைந்த ஆர்ப்பாட்ட காரர்கள், அவர் உரையாற்றி முடிக்கும் முன்னரே,அவருக்கு எதிராக கோஷமெழுப்ப தொடங்கினர். முன்னதாக இராணுவத்தினருக்கும் முபாரக்கிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போது, அமெரிக்க CIA புலனாய்வு பிரிவினர்கள் விடுத்த அறிவிப்பில், வியாழக்கிழமை இரவு முபாரக் பதவி விலகுவதை அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இவ்விவகாரம் மேலும் சூடுபிடித்திருந்த நிலையில், முழு உலகமும் முபாரக்கின் உரைக்காக காத்திருந்தது. ஆனால் முபாரக்கின், உரை ஏமாற்றம் அளித்துள்ளதுடன், ஏன் அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தவறான தகவலை கொடுத்தனர் என கண்டனங்களும் எழுந்துள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment