Feb 10, 2011
உப்பு தின்றவன் தண்ணி குடிப்பான்!!!
கடலூர்: கொலை மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் சிறைவாசம் அனுபவிக்கும் பிரேமானந்தா சாமியாரை மஞ்சல் காமாலை தாக்கியுள்ளது. இதையடுத்து அவர் கடலூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். திருச்சி அருகே ஆசிரமம் நடத்தி வந்தவர் பிரேமானந்தா சாமியார். அவர் மீது கொலை, கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பின்பு இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் கொலை மற்றும் கற்பழிப்பு ஆகிய குற்றத்துக்காக சாமியார் பிரேமானந்தாவுக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது.இதையடுத்து கடலூர் சிறையில் பிரேமானந்தா சாமியார் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே இருதயம் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளுக்கு கடலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment