Feb 13, 2011

2 ஜி விவகாரம்: பாரதிய ஜனதா அருண்சௌரி விரைவில் கைது செய்யப்படலாம்!!

புதுதில்லி, பிப்.13: பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அருண்சௌரி சிபிஐ முன்பு அடுத்த வாரம் ஆஜராக உள்ளார். 2001-ல் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும் பொது அவர்கள்தான் இந்த ஊழலை ஆரம்பித்து வைத்தார்கள். இதைதான் ராசா சொன்னார் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் தொலைத் தொடர்புத் துறையில் எப்படி அலைக்கற்றை ஒதுக்கீட்டை செய்தார்களோ அதே முறையை பின்பற்றிதான் நானும் இந்த ஒதுக்கீடை செய்தேன் என்று கூறினார். இந்த சூழ்நிலையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சில்தான் முதன் முதலில் ஊழல் ஆரம்பிக்கப்பட்டு அவர்கள் இதன் மூலம் ராசாவை மிஞ்சும் அளவுக்கு அதிக அளவில் ஊழல் பணம் கைமாறி உள்ளதாக சிபிஐ வசம் ஆதாரங்கள் சிக்கி உள்ளன. இதை தொடர்ந்து இந்த குற்றம் குறித்து அவரிடம் சிபிஐ விசாரணை நடத்தும். அவர் கைது செய்யபடுவார் என்றும் நம்பப்படுகிறது. நான் இல்லாதபோது எனது வீட்டுக்கு ஒருவர் பேசியுள்ளார். பின்னர் நானே சிபிஐயைத் தொடர்புகொண்டு கொல்கத்தாவில் இருந்து திரும்பிவந்ததும் பிப்ரவரி 21-ம் தேதி விசாரணைக்கு வருவதாகத் தெரிவித்தேன் என அருண்சௌரி தெரிவித்தார்.

No comments: