Feb 13, 2011

எட்டப்பன்களை வைத்து பத்திரிகை தொடங்கும் ராஜபட்ச!!!

கொழும்பு, பிப்.13- இலங்கையில் தமிழர்களிடையே அரசுத் தரப்பு செய்திகளை பரப்பும் வகையில், லேக் ஹவுஸ் ஊடக நிறுவனத்தின் "தினகரன்" நாளிதழ் பதிப்பை யாழ்ப்பாணத்தில் தொடங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிபர் ராஜபட்சவின் உத்தரவின்படி இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ தமிழ் நாளிதழான தினகரன் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரவுள்ளது என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில், அடுத்த மாதம் 2-ம் தேதி முதல் "தினகரன்" நாளிதழ் வெளியாகும் என்றும் அந்த இணையதளத் தகவல்கள் கூறுகின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து தினக்குரல், தினமுரசு, வலம்புரி, உதயன் ஆகிய நான்கு நாளிதழ்கள் ஏற்கெனவே வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பார்பன பத்திரிகைகளாகிய தினமலர், தினமணி, இந்தியா டுடே இவர்கள் ராஜபட்ச புகழ் பாடியும், தமிழர் விடுதலை போராட்டத்தை எதிர்த்தும் கருத்துகள் எழுதிவந்தன. இதானால் இந்த பத்திரிக்கைகள் பற்றி தீவிரவாதி ராஜபட்சவிடம் நல்ல அபிப்பிராயம் நிலவி வந்தது. இவர்கள் இந்தியாவில் பத்திரிக்கை விபச்சாரம் செய்து குழப்பங்களையும், ஒருசார்பு செய்திகளையும், ஹிந்துத்துவா ஆதரவு செய்திகளையும், வெளியிட்டு தங்களது வியாபரத்தை வெகுஜோராக செய்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் இலங்கையில் கடையை விரித்து தீவிரவாதி ராஜபக்சே புகழ் பாடி பணம் சம்பாதிக்க பேச்சு வார்த்தைகள் ரகசியாமாக நடந்து வருவதாக பத்திரிகை துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments: