Feb 13, 2011

ஆட்சியில் பங்கு கேட்க்கும் காங்கிரஸ்!! அஸ்தமிக்கும் சூரியன்!!

சென்னை: தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட தமிழக காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழு ஆய்வுப் பணியின் முதல் கூட்டம், சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ.,க்களிடம் ஐந்து கேள்விகளை ஐவர் குழு எழுப்பியது. தி.மு.க.,விடம் 80 தொகுதிகளும், ஆட்சியில் பங்கும் கண்டிப்பாக கேட்க வேண்டும் என்ற கோரிக்கைகளை, பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தினர்.

முதற்கட்ட பேச்சு வார்த்தை துவக்கம் : தொகுதி பங்கீடு குறித்து தி.மு.க., - காங்கிரஸ் இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நேற்று மாலையில் துவங்கியது. ஐவர் குழுவினரான தங்கபாலு, வாசன், சிதம்பரம்,ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார் ஆகியோர், முதல்வர் கருணாநிதியை அவரது வீட்டில் நேற்று மாலை சந்தித்து பேசினர். தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சு வார்த்தை 20 நிமிடம் நீடித்தது. வெளியே வந்த தங்கபாலு நிருபர்களிடம் கூறும் போது, ""தேர்தல் கூட்டணிக்காக அமைக்கப்பட்ட ஐவர் குழு, மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்துள்ளது. மாவட்ட தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்த உள்ளோம். கருத்துகளை அறிந்த பின், தி.மு.க.,வுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை துவங்குவோம்,'' என்றார். வடமாவட்டங்களில் வெற்றி பெற, கூட்டணியில் பா.ம.க.,வைச் சேர்க்க வேண்டும். மேற்கு மாவட்டங்களில் வெற்றி பெற, கொங்கு சமூகத்தினரின் கட்சியை சேர்க்க வேண்டும்.

No comments: