Feb 13, 2011

பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றத்தை அணுகுகிறார் ஹஷிம் அன்சாரி!!!

லக்னெள, பிப்.13: அயோத்தி வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவுசெய்திருப்பதாக அந்த வழக்கைத் தொடர்ந்த ஹஷிம் அன்சாரி தெரிவித்தார். இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வுகாண தாம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்ததால் இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறினார். பாபர் மசூதி தீர்ப்பு காரணமாக தேசத்துக்கு எந்த இழப்பும் ஏற்படுவதை நான் ஒருபோதும் விரும்பியதில்லை. ஆனால் எதிர் அணியில் உள்ள சங்கபரிவார்கள் நாடு பிளவுபட வேண்டும் என விரும்புகின்றனர். பாபர் மசூதி பாபர் மசூதி பிரச்சனையை வைத்து இந்தியாவில் மத துவேசத்தை வளர்த்து இந்தியாவை துண்டாட சதி செய்கிறார்கள்.பாபர் மசூதியோடு இவர்கள் நின்றுவிடவில்லை காசி, மதுரா, இதுவல்லாமல் இந்தியா முழுவதும் மூவாயிரம் பள்ளிகள் இவர்கள் லிஸ்ட் இல் உள்ளது. இதை முஸ்லிம்களால் சகித்து கொள்ளமுடியாது. இது ஒரு பெரிய இன மோதல்களை உருவாக்குவதோடு பிரிவினைக்கும் வழிவகுக்கும் என்று கூறினார். அதை என்னால் சகித்துக்கொள்ள முடியாது என அன்சாரி தெரிவித்தார்.

No comments: