:இது தான் காஷ்மீரின் தேசியக்கொடி::
1) பாரதிய ஜனதாவும் அதன் தேசபக்தியும்:
காஷ்மீர் மாநிலத்தில் தேசிய கொடி ஏற்றுவோம் என்று பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் பிடிவாதம் செய்வதும், அதற்காக வேண்டி இந்தியாவின் பல நகரங்களில் இருந்து காஷ்மீர் நோக்கி படை எடுப்பதையும் பார்க்கும் போது பாரதிய ஜனதாகாரர்கள் மட்டும்தான் தேசபக்தி நிறைந்தவர்கள் மற்றவர்களுக்கு தேசபக்தி இல்லை என்பது போல் ஒரு மாயத்தோற்றத்தை உண்டாக்க பார்கின்றனர். இந்தியா முழுவது நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் இவர்களது பயங்கரவாத முகம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்தது. இதை மூடி மறைக்கவே தேசபக்தி முகமூடியை அணியபார்கிறார்கள். இந்த பாசிச பயங்கரவாதிகள் ஒருநாளும் தேசியக்கொடியை ஏற்றுகொண்டவர்கள் இல்லை. ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கம் நடத்தும் அனைத்து நிகழ்சிகளிலும் கவிகொடியே ஏற்றப்படும். இவர்கள் இந்திய மூவர்ண தேசியகொடியை அபசகுனமானது என்றும் காவிகொடியே சிறந்தது என்றும் கூறி திரிபவர்கள். இந்தியாவின் தேசிய கொடியை மாற்றவேண்டும் என்று கூறிவருபவர்கள்.
2) காஷ்மீரின் வரலாறு:
முதலில் காஷ்மீர் எப்படி இந்தியாவுடன் இணைக்கப்பட்டது என்ற வரலாறை தெரிந்து கொண்டால் நமக்கு அங்கு தேசியக்கொடி ஏற்றலாமா? கூடாதா என்பதை புரிந்து கொள்ள இலகுவாக இருக்கும். நாடு சுதந்திரம் அடைந்த போது இந்தியா, பாகிஸ்தான் என்று இரு நாடுகளாக பிரிக்கப்பட்டன. ஆனால் காஷ்மீர் மாநிலத்தை ஆங்கிளையர் தனி நாடாக விட்டு சென்றனர். காஷ்மீரை இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ சேர்க்காமல் தனி நாடாகவே விட்டுச்சென்றார்கள். காஷ்மீர் நாட்டை ஹரிசிங் என்ற ஹிந்து மன்னர் ஆட்சி செய்து வந்தார். இந்நிலையில் 1947 ல் மன்னர் ஹரிசிங் பாகிஸ்தானுடன் காஷ்மீரை இணைக்க ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். இந்நிலையில் ஜவகர்லால் நேரு ஹரிசிங் மன்னரை சரிகட்டி இந்தியாவுடன் ஒரு நிபந்தனை ஒப்பந்தத்தை போட்டுக் கொண்டார். இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு ஒப்பந்தங்கள் அடிப்படையில் இந்திய ராணுவமும், பாகிஸ்தான் ராணுவமும் காஸ்மீரை கைப்பற்ற களம் இறங்கின. இப்படி நடந்த சண்டையில் இந்தியாவின் கையில் கிடைத்தது தான் இப்பொது இருக்கும் காஷ்மீர் மாநிலம். அது போல் பாகிஸ்தான் கையில் கிடைத்தது தான் சுதந்திர காஷ்மீர் என்று பாகிஸ்தானால் அறிவிக்கப்பட்ட ஆசாத் காஷ்மீர் ஆகும். இந்த அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் இந்த முட்டாள் மன்னன் ஹர்சிங் தான் என்பது தெளிவான உண்மை.
இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களோடு காஷ்மீரை இணைத்து கொள்ள திட்டமிட்டதால் காஷ்மீரில் குழப்பம் ஏற்பட்டது. காஷ்மீர் மக்கள் இந்தியாவோடும், பாகிஸ்தானுடனும் இணைய விரும்பாததால் இந்த பிரச்சனை 1948 ல் ஐநா மன்றத்துக்கு கொண்டு போகப்பட்டது. ஐ.நா மன்றத்தில் காஷ்மீர் மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தப்படவேண்டும் என்றும், அவர்கள் இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ அல்லது தனி நாடாகவோ அவர்கள் எதை விரும்புகிறார்களோ அதன்படி இதில் தீர்வு காணப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் இன்று வரை இருநாடுகளும் இந்த ஓட்டேடுப்பை நடத்தவில்லை . மாறாக தாங்கள் அபகரித்து வைத்துள்ள இடத்தை எப்படியாவது தக்கவைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருநாடுகளும் பலவிதமான சூழ்சிகளை செய்து அந்த மக்களை ஒடுக்கி கொன்று குவித்து வருகிறார்கள். காஷ்மீர் மக்களுக்கு இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ சேர விருப்பம் இல்லை என்பதால் அந்த மக்கள் சுதந்திர காஷ்மீரை கேட்டு போராடி வருகிறார்கள். இதுதான் காஷீரின் வரலாற்றின் சுருக்கம்.
3) ஒப்பந்தத்தை மீறிய இந்தியா:
காஷ்மீரை இந்தியாவுடன் சேர்த்துவைத்து கொள்ள இந்தியா செய்த ஒப்பந்தத்தை காலபோக்கில் கொஞ்சகொஞ்சமாக இந்தியா மீறியது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாதுக்கப்பு, அயலுறவு, நாணயம், செய்தி தொடர்பு இது மட்டும்தான் இந்தியாவுடையது. காஷ்மீரில் ஓட்டடுப்பு நடத்தி தேர்ந்தெடுக்கபடும் நபர் காஷ்மீரின் பிரதமர் என்று அறிவிக்கபடுவார். அந்த அடிப்படையில் காஷ்மீரின் முதல் பிரதமர் சேக் அப்துல்லா. பின்னர் இந்தியா எல்லா ஒப்பந்த சரத்துகளையும் காலில் போட்டு மிதித்து விட்டு பிரதமர் என்பவர் முதல்வர் ஆனார், தனிநாடு என்பது தனி மாநிலமாக மாறி போனது. இதுதான் காஷ்மீரின் மறைக்கப்பட்ட வரலாற்றின் சுருக்கம்.
4) காஷ்மீரும் அதன் தேசிய கொடியும்:
காஷ்மீரில் தேசிய கொடி ஏற்றுவது என்ன தவறா? தேசியக்கொடியை காஷ்மீரில் ஏற்றுவதற்கு ஏன் அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவிகிறார்கள் என்ற கேள்வி நம்மிடம் இயல்பாக எழும். காஸ்மீரில் இந்திய தேசியக்கொடியை ஏற்றுவதுதான் தேசவிரோத செயல். அது எப்படி என்றால்? மீத முள்ள ஒப்பந்த சரத்துகள் படி காஷ்மீரின் தேசிய கொடி இந்தியாவின் தேசியக்கொடி இல்லை. ஒப்பந்தத்தின் இந்த ஒரு அம்சத்தை மட்டும் இந்தியா இன்றுவரை ஒழுங்காக கடைப்பிடித்து வருகிறது. அதனால் இந்திய தேசிய கொடியை காஷ்மீரில் ஏற்றுவோம் என்று அடம்பிடிப்பது தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்துவது மட்டும் இல்லை இந்தியாவின் அரசியல் சாசன சட்டத்துக்கும் எதிரானது. இதேவெல்லாம்! இந்த பாசிச பயங்கரவாதிகளுக்கு தெரியாதா என்ன? அப்படி இருக்க இவர்கள் ஏன்? அங்கு கொடியற்றியே தீருவேன் என்று அடம் பிடிகிறார்கள். ஆதாயம் இல்லாமல் இல்லை இவர்கள் நடத்திய தொடர் குண்டு வெடிப்புகள் அம்பலமான இந்த சூழ்நிலையில் அதை மறைக்கவே இந்த தேசபக்தி வேடம். மொத்தத்தில் இந்த பாசிச சிந்தனை உடைய ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஒரு பசுதோல் போர்த்திய புலி. இவர்களது தீவிரவாத முகம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டதால் இத்தனை நடிப்புகளும், ஆர்ப்பாட்டங்களும் இதுதான் உண்மை.
காஷ்மீர் மக்களுக்கு என்று தனி தேசியக்கொடி இருக்க இந்தியாவின் தேசியக்கொடியை காஷ்மீரில் ஏற்ற நினைக்கும் பாசிஸ்டுகள் காஷ்மீரிகள் அவர்கள் தேசியக்கொடியை இந்தியாவில் ஏற்ற நினைத்தால் இவர்கள் சம்மதிப்பார்களா? நாம்தான் அனுமதிப்போமா? சிந்திப்போம் செயல்படுவோம். மத மாச்சாரியங்கள் ஒழிப்போம்! மனித நேயம் காப்போம்!!.
அன்புடன் : ஆசிரியர் சிந்திக்கவும்.நெட்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
ennathaanyaa nadakkuthu ange....?
Aasiriyar avarhale pathirikkai tharmathai kappatrungal.
32 ANDU kalamaha ella indiarhalin managalil erruntha SHANTHEHATHAI THEERTHU VAITHA
SINTHIKKAVUM aashiriyarin pathirrikkai payanam thoodara ENGALIN VALTHUKKAL.
VALLHE SINTHIKKAVUM.NET
Post a Comment