![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrihwb4A6TXNDmsyS3PoJWYwkbGyGDXq_OUuOqHzToulGI6YQIflMid2YJKT0yrzezupU8PVa7rYQO4v2VMwhpq2bAnubA8p-nW9UL1oVNXqFtDXKuWbmGjYcJPHlIutxFkxoOzx7wDoM/s320/untitled1.bmp)
வேதாரண்யம், ஜன. 26: இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கொல்லப்படுவதற்கு, மத்திய அரசின் பலவீனமே காரணம் என்று அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார். நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம், புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஜெயக்குமார் கடந்த சனிக்கிழமை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டார். ஆசியாவில் மிகப் பெரிய நாடு இந்தியா. நமது நாட்டின் முப்படைகளின் வலிமையைக் கண்டு உலக நாடுகளே அஞ்சுகின்றன. ஆனால், மிகச் சிறிய நாடான இலங்கை துணிந்து நமக்கு சவால் விடுகிறது. தமிழக மீனவர்களைத் தொடர்ந்து கொன்று வருகிறது. இதற்கு மத்திய அரசின் பலவீனமே காரணம். இந்தியப் பிரதமர் செயல்பட முடியாத பலவீனமான பிரதமராக உள்ளார். மாநில அரசைப் பொருத்தவரையில், தமிழக முதல்வருக்கு ஆட்சி செய்வது, அரசுப் பணிகள் செய்வது, மக்கள் பணியாற்றுவது ஆகியவற்றில் அக்கறையில்லை.
No comments:
Post a Comment