![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQADsxrdMm2agOD9RLP5drvJ9Gn4NROUyAJFofgTci5jWgttCf4KJH-SscLPHUB2hIcmj5BBJrcuYjMeVFZkBhUu-P0drb8qHJqFRuhxodGRoxKg6HlVhfop_9qKcaxgXgY4MhIxuVwmM/s320/sinthikkavum33.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjx9GrnDUdBJjyLGGGchkt4AMnrxBdceeoG7GdU9sg3sU74KMzFR36blYobwqHE8szwIcRADXvrGaci5qR5UB_y9pY7pk2SFx7uFmlEgtPFbE21fsbpK-nJU5aCBj65OWLem8LAr3ZFil0/s320/Untitled-1_copy.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEht301ddMIvQYiHG9dmWS5aDYhwyhORowWguKHvCn9H2eaUuxAmD3Ea3SIJehG_DYBn86P4nGLD6FshQYGDkEDmaBJ_c2geYO0WgzoGXRDMO1KI-PwrrXvwZgd81GqtMXu37vcH72qTHaI/s320/Nithandranj.png)
ஜோதிடம் பார்க்க வரும் பெண்களின் மனநிலையை அவர்களிடம் பேச்சு கொடுத்து அறிவார். அவர்கள் குடும்ப தாம்பத்யத்தில் திருப்தி இல்லாமல் இருப்பது தெரிய வந்தால் முதல் வேளையாக அவர்களுக்கு பாலுணர்வை தூண்டும் விதமாக நடந்து கொண்டு தனது பள்ளியறைக்கு கூட்டிச் சென்று “சாமி உங்களுக்கு மன்மதன் மூலம் மகிழ்ச்சி தர போகிறார்” என்று கூறி மயக்கி அவர்களுடன் உல்லாசமாக இருப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் ஏராளமான பெண்கள் இவர் வலையில் விழுந்து வாழ்க்கையை தொலைத்துள்ளனர். அவர்களிடம் ஒவ்வொரு முறையும் ரூ. 1000 முதல் ரூ. 3 ஆயிரம் வரை வாங்கி ஏமாற்றி உள்ளார். திருமணமான பெண்களிடம் மட்டுமே செக்ஸ் வைத்துக்கொள்வார். இளம் பெண்களிடம் சில்மிஷத்துடன் நிறுத்திக் கொள்வார்.
ஒரு வேளை எல்லை மீறினால் கற்பழிப்பு வழக்கில் உள்ளே போய்விடுவோம் என்று உஷாராக இருந்துள்ளார். தன்னிடம் வந்து சென்ற பெண்கள் பற்றிய விஷயங்களையும் அவர்களிடம் வசூலித்த தொகைகளையும் டைரியில் முகவரியுடன் குறிப்பிட்டு வைத்துள்ளார். யார் -யாருடன் உடலுறவு வைத்தாரோ அவர்களது பெயரில் சிகப்பு நட்சத்திர குறியீட்டை அடையாளமாக குறித்துள்ளார். தினமும் வி.டி.ஈஸ்வரனை பார்க்க குறைந்த பட்சம் 6 பேர் முதல் 12 பேர் வரை வந்து சென்றுள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் அதிகபட்சமாக 1500-க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். இவர்களில் 1200-க்கு மேற்பட்டவர்கள் பெண்கள். இவர்களில் 200-க்கும் மேற்பட்ட பெண்களின் பெயர்களில் சிகப்பு நட்சத்திர குறியீடு போட்டு வைத்துள்ளார்.
பெண்களிடம் முதலில் தன்னை ஒரு சித்தர் என்று கூறுவார். தான் ஆண்மை சக்தி மிக்கவன். நாளை என்ன நடக்கும் என்பதை அறியும் 7-வது அறிவு என்னிடம் உள்ளது என்று கூறியபடியே பெண்களின் அங்கங்களை அவர் வர்ணித்து செக்ஸ் ஆசையை தூண்டுவார்.
யாரையும் வற்புறுத்தி செக்ஸ் கொள்ள விரும்புவதில்லை. அவர்களது மனதை கெடுத்து அவர்களுக்கு தன்னிடம் உள்ள காதல் வலி (லவ் பெயின்) என்ற ஆபாச சி.டி.யை போட்டு காட்டுவார். அவர்களுடன் அமர்ந்து அதை பார்த்து அவர்களின் உணர்ச்சியை மேலும் தூண்டி தனது இச்சையை தீர்த்து கொள்வார்.
எந்த பெண்களாவது இங்கு நடப்பதை வெளியில் சொன்னால் பில்லி, சூனியம் வைத்து விடுவேன் பிறகு கைகள் செயல் இழந்து ரத்தம் கக்கி செத்து விடுவீர்கள் என்று மிரட்டி உள்ளார். இதனால் யாரும் போலீசில் புகார் செய்யாமல் இருந்துள்ளனர்.நாளொன்றுக்கு ரூ. 12ஆயிரம் வரை சம்பாதிப்பதாகவும் அமெரிக்கா பல்கலைக்கழகம் தனக்கு டாக்டர் பட்டம் வழங்கி உள்ளதாகவும் கூறி கோர்ட் ஷூட் போட்டுக் கொண்டும் ஒரு சில வசதி படைத்த பெண்களிடமும் கைவரிசை காட்டி உள்ளார்.
செய்வினை எடுப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். டி.வி.க்களில் வசிய ஆலோசனை வழங்குவதாக கூறியே பல பெண்களை வெளியூர்களில் இருந்து தன்னை தேடி வரவழைத்துள்ளார். அதன்படி காதலனை வசியபடுத்த மை தருவதாக கூறி ஏராளமான பெண்களிடம் எல்லை மீறியுள்ளார். ஒரு சில பெண்களுக்கு அல்வாவில் கஞ்சா வைத்து கொடுத்து “செக்ஸ்” அடிமையாக வைத்துள்ளார். பொள்ளாச்சி ராணி, சேலம் குருவம்மாள், திருப்பூர் சவிதா உள்ளிட்ட 12 பெண்களை நிரந்தரமாக வைத்து செக்ஸ் அனுபவித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தால் அவர்களது பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும்.வி.டி.ஈஸ்வரன் தன்னுடன் தொடர்பு வைத்துள்ள பெண்களை ஆபாச படம் எடுத்தாரா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்.
No comments:
Post a Comment