Jan 27, 2011

வீட்டிலே புலி!! வெளியிலே எலி!! : அதுதான் ஆறரை கோடி தமிழர்கள்!!


அநுராதபுரம் சிறைச்சாலையில் ஒரு பெண் சிறைக்கைதி உட்பட குறைந்தது நான்கு சிறைக்கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர். இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சிறைக்கைதிகள் மீதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எமது விடுதலைக்கு ஒத்துழைக்க முடியாவிட்டாலும் எமது பாதுகாப்புக்காவது உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தமிழ்க்கைதி ஒருவர் வானொலி ஊடகம் ஒன்றின் ஊடாக வேண்டுகோள் விடுத்தார். இலங்கை தீவின் தீவிரவாத அதிபதி மகேந்திர ராஜபக்சே தமிழர்களை இன சுத்திகரிப்பு செய்யும் வேலையை திறம்பட செய்துவரும் வேலையில் தமிழக மக்களே அவர்களுக்கு உதவும் சக்தி பெற்றவர்கள் என்பதை எப்போது நிருபிக்க போகிறார்கள்? இந்த தமிழர்கள். இவர்கள் தமிழக காவியங்களில் கவிதைகளில் தமிழர்கள் வீரர்கள் என்று சொல்லி கொள்ள வேண்டியதுதான். மற்றபடி இவர்கள் வீட்டிலே புலி, வெளியிலே எலி போன்றவர்கள்தான். எப்போது இந்த மக்களுக்கு சுரணை வர போகுது என்று பார்ப்போம்.

1 comment:

MANO நாஞ்சில் மனோ said...

வேதனையாக இருக்கிறது....