இந்தியாவில் மதக் கலவரத்தைத் தூண்டுவதற்கு பெரிய சதி வேலையெல்லாம் தேவையே இல்லை. கொஞ்சம் புரளி கிளப்பும் திறன் இருந்தால் போதுமானது. அவர்களின் ஆய்வுக்கூடத்தில் தமிழகத்துக்-கென உருவாக்கியிருக்கும் ஃபார்முலா என்ன தெரியுமா? கொஞ்சம் களிமண் அல்லது பிளாஸ்டர் ஆப் பாரிஸ், வண்ணம் தீட்டும் கருவிகள், ஒரு மாட்டுவண்டி... இவை போதுமானது. ஆம். இந்துத்துவா சக்திகளும் பார்ப்பனியக் கும்பலும், கடந்த 20 ஆண்டுகளில் மார்வாடிகளின் கொழுத்த பண ஆதரவோடு தமிழ்நாட்டில் உருவாக்-கியிருக்கும் பிள்ளையார் பொம்மை ஊர்வலங்-களும் இப்படித் திட்டமிடப்-பட்டவையே! காவல்துறையின் அனுமதி-யில்லாத பகுதிகளிலும் நாங்கள் ஊர்வலம் போவோம் என்று மத விரோதத்தை மக்கள் மனதில் ஏற்படுத்துவதற்கான அடிப்படை-களையும் அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
அறிவுக்கு கொஞ்சமும் பொருந்தாத, ஆபாசத்தின் ஊற்றாக விளங்கும் இந்துமதப் புராணக் குப்பைகளின் உச்சபட்ச படைப்பு-களில் ஒன்றுதான் விநாயகர் அல்லது பிள்ளையார் என்னும் கடவுள் பாத்திர-மாகும். இந்த உண்மைகளைப் போட்டு-டைத்த பெரியார், 1928-லேயே குடிஅரசு இதழில் இதுகுறித்த செய்திகளை கட்டுரை-யாக எழுதி வெளியிட்டார்.
தீபாவளி, அய்யப்பன் மடமை போன்று சீசன் தோறும் நடக்கும் மடமைகளைப் போல, ஒவ்-வோராண்டும் பிள்ளையார் சதிர்த்தி மூட நம்பிக்கை அரங்கேறும்போது அதனைத் தோலுரிக்கும் விதமாக, திராவிடர் கழகம் இக்கட்டுரையினை துண்டறிக்கையாக வெளியிட்டு மக்கள் மத்தியில் பரப்பி, அவர்-களை சிந்திக்கத் தூண்டும் பணியினைச் செய்து வருகிறது. அவ்வாறே இவ்வாண்டும் துண்டறிக்கையினை வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரச்சாரப் பணியினை மேற்-கொண்டது.
கட்டுரையினை மட்டும் வெளியிடாமல் அத்துடன் பிள்ளையார் பிறப்பு என்னும் அறிவுக்குப் பொருத்தமற்ற கதையினைக் கேள்விக்குள்ளாக்கும் படங்களுடனும், பிள்ளையார் ஊர்வலம் என்னும் பெயரில் நடக்கும் சுற்றுச்சூழல் கேடு, பொது அமைதிக்குக் கேடு, மத நல்லிணக்கத்திற்குக் கேடு, பொருளாதார இழப்பு, போக்குவரத்து கேடு, மத மோதல்கள், ஆயிரக்கணக்கான காவல்துறையினரின் உழைப்பு வீண் என இத்தனையையும் சுட்டிக் காட்டி துண்-டறிக்கை வெளியிடப்பட்டு விநியோகிக்கப்-பட்டது.
விநாயகர் திருமணம் ஆகாதவர் என்று தென்னாட்டில் கதை கட்டியுள்ள ஆரியம், அதே பிள்ளையாருக்கு சித்தி, புத்தி என இரண்டு மனைவிமார்கள் உள்ளனர் என கதை கட்டியிருப்பதை விளக்கியது துண்-டறிக்கை. அதைவிட, ஆபாசத்தின் உச்சமாக வல்லபை என்ற பெண்ணை தனது மடியில் வைத்துக் கொண்டு, அப்பெண்ணின் பிறப்புறுப்-பில் விநாயகர் தன் தும்பிக்கையை வைத்து கொண்டிருக்கும் சொல்லக்கூசும் சேதியை, பார்க்கக் கூசும் காட்சியை சிற்பமாக செதுக்கிக் கோயில்களிலும் தேர்-களிலும் வைத்து வழிபட்டுக்கொண்டிருக்கும் கொடுமையினை எடுத்துக்காட்ட தர்மபுரி மாவட்டம் மத்தூர் என்ற ஊரில் உள்ள கோயில் சிற்பத்தினை முதல் பக்கத்தில் படத்துடன் வெளியிட்டு இந்த ஆபா-சத்துக்கா விழா? என்ற அறிவார்ந்த கேள்வி-யினையும் எழுப்பியது துண்டறிக்கை.
துண்டறிக்கையை வாங்கிப் படித்த மக்களிடமும் இதே கேள்வி எழுந்தது என்றால் அது மிகையில்லை. இதற்கா இத்தனை நாள் பூசைகள், விழாக்கள் செய்து-வந்தோம் என அவர்களே வெட்கித் தலை-குனிந்தனர்; மனம் நொந்தனர். எந்த விநாய-கரை வைத்து மதவாத எண்ணத்தை தமிழ்நாட்டில் வளர்த்துவிடலாம் என்று கனவு கண்டார்களோ.. அந்த விநாயகருக்கே ஆபத்து என்றதும் இந்துத்துவா கும்பல் வெறி கொண்டது. விநாயகர் சதுர்த்தி மூடநம்பிக்கை துண்டறிக்கை விநியோகத்தை தடை செய்து, திராவிடர் கழகத் தோழர்களை கைது செய்ய-வேண்டும் காவல்துறையின் படியேறியது இந்துமுன்னணி.
நீலகிரி, கோவை, திண்டுக்கல், பம்மல் என தமிழகத்தின் பல இடங்களிலிருந்தும் வழக்குகள், கைது மிரட்டல்கள் எனத் தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இதற்கெல்லாமா திராவிடர் கழகத்தவர் அஞ்சுவர்? எதிர்ப்பு என்றால் இன்னும் வேகத்தோடு செயல்-படுவதுதானே பெரியார் தொண்டர்களின் பெருங்குணம். இது தெரியாமல் மோதியது இந்துத்துவா கும்பல். வா பகையே வா! என்று வரவேற்புப் பத்திரம் வாசித்துப் பணியைத் தொடர்ந்தனர்.
தமிழகம் முழுக்க பெரும் வரவேற்பைப் பெற்றது என்பதற்குப் பெரும் சான்று இந்துமுன்னணியின் புலம்பல் தான்..! இதற்கிடையில், பிள்ளையாருக்கு தேங்காய் உடைந்து மனுப் போட்டுப் பார்த்-தனர்; அவர்களின் மடத்தனத்தைக் கண்டு நம்மால் சிரிக்காமல் இருக்கமுடியவில்லை. பிள்ளையாருக்கு சக்தி இருக்குமேயானால், துண்டறிக்கையே வெளியாகியிருக்கக் கூடாது என்று சிந்திக்க அவர்களுக்கு அறிவு என்ற ஒன்று வேலை செய்ய வேண்டுமே! இத்தனை வருடம் கொதிக்காதவர்கள் இந்த ஆண்டு கொந்தளிப்பதேன்? விடுதலை, உண்மை இதழ்கள் என்றாலே கையால் தொடவும் அஞ்சும் கும்பல், நமது வெளியீடு-களைப் படிக்காமலே எதிர்த்து வந்தார்கள்.
ஆபாசத்தையும், மடமையையும் படங்-களுடன் வெளியிட்டதும் அவர்களையும் பார்க்கத் தூண்டியது. எதிர்த்து தொலை-பேசியில் வசைமாரி பொழிந்தவர்கள் பலர் துண்டறிக்கையை வாங்கிப் படிக்காமலேயே பேசினர். அவர்களிடம் பொறுமையாக, துண்டறிக்கையைப் படித்துவிட்டு மீண்டும் இதே எண்ணுக்கு அழைத்துப் பேசுங்கள் என்று சொன்னதும், படித்துப் பார்த்தவர்கள் யாருக்கும் கோபம் வரவில்லை; வெட்கம் தான் வந்திருக்க வேண்டும். ஏனென்றால் மீண்டும் அவர்கள் அழைக்கவேயில்லை.
ஆனாலும் அறிவு, மான உணர்வு உள்ளவர்களுக்கு வெட்கம் வரும். அதற்குத் தொடர்பே இல்லாதவர்கள் என்ன செய்வது? கோபம் மட்டுமே வரும். அல்லது பயம் வரும். வந்த பயத்தின் விளைவுகள் தான் வழக்குகள். ஆதாரத்துடன் வெளியிடப்-பட்டுள்ள துண்டறிக்கையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தால், அதை விட நமக்கு பெரும் வாய்ப்பு என்ன? வீதி மன்றங்களில் பிள்ளையார் ஆபாசப் பிறப்பையும், மூடக் கதைகளையும் கிழிகிழி என்று கிழித்து அறிவு வளர்த்தது போதாது; நீதிமன்றத்-திலும் உங்களுடைய பணி வேண்டும்.
அதிகாரப்பூர்வமாக, புராணக் குப்பைகளை ஆபாசம் என்றும், மடத்தனம் என்றும் நீதிமன்றமே தீர்ப்பு வழங்குமாறு உங்கள் பணி அமைய வேண்டும் என்று விரும்புகிறது போலும் இந்துத்துவா! நமது கேள்வி-களுக்குப் பதில் சொல்ல முடியாமல் ஓடி ஒளியும் கும்பலுக்கு இந்து முன்னணியே! ஓடாதே நில்! என்று அறைகூவல் விடுத்தோம். வழக்கு எங்கள் தோழர்கள் மீது தொடருவதை விட, என் மீது தொடருங்கள். நானும் நீதிமன்றத்தில் வழக்காடி நீண்ட நாள் ஆகிறது. இப்படி ஒரு அருமையான வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்காது என்று ஆர்த்து எழுந்தார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
கழகத் தோழர்கள் யார் மீது வழக்கு தொடரப்பட்டாலும் நானே வழக்காடுவேன் என்று அறிவித்தார். தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்-கூட்டத்தில் விநாயகருக்கு சித்திபுத்தி என்று இரு மனைவியர் மட்டுமல்ல; 15 மனைவிகள் என்று புராணம் கூறுவதை ஆதாரத்துடன் எடுத்து விளக்கினார் ஆசிரியர் கி.வீரமணி. பதில் சொல்ல வழியின்றி பதுங்கியது பார்ப்-பனியம். தந்தை பெரியார் இயக்கத்தின் கடைசித் தொண்டன் கேட்கும் ஒரு எளிய கேள்விக்கே பதில் சொல்ல முடியாமல் திகைப்பவர்கள், இவ்வியக்கத்தின் தலைமைத் தொண்டனாக விளங்குபவரின் கேள்வியை எதிர்கொள்ளக் கூட அஞ்சுவார்களே! அதுதான் நடந்தது.
இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திராணியற்றவர்கள், கொஞ்சமும் வெட்க-மில்லாமல் மீண்டும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை நடத்தினர். இவ்வாண்டும் வன்முறைகள் அரங்கேறின. குமரி மாவட்டம், கிள்ளியூர் ஒன்றியத்தில் இந்து-முன்னணி சார்பில் 155 விநாயகர் சிலைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன. இந்த சிலைகள் மார்த்தாண்டம் அருகே உள்ள மிடாலம் கடலில் கரைப்பதற்காக கருங்கல் அருகே பிள்ளையார் சிலை ஊர்வலத்தில் திடீரென இரு பிரிவினர் இடையே மோதல் வெடித்தது.
இதில் அரசுப் பேருந்து மற்றும் கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. தனியார் நிதி நிறுவன அலுவலகத்துக்குள் வன்முறையாளர்கள் புகுந்து சூறையாடினர். இன்னும் பல இடங்களில் பதற்றத்தை உருவாக்கி, வன்முறையை விதைக்க முயற்-சித்தது. தமிழக அரசின திட்டமிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரும்-பாலான சதித் திட்டங்கள் முறியடிக்கப்-பட்டன. இதே போல சென்னையில் நடந்த பிள்ளையார் பொம்மை ஊர்வலங்களில் வழக்கத்துக்கும் குறைவாகவே மக்கள் பங்கெடுத்தனர் என்று நோக்கர்கள் கூறுகின்றனர்.
விதவிதமாக பிள்ளையார் பொம்மை வடிவமைத்து, போக்கு-வரத்துக்கும் கட்டுமானங்களுக்கும் இடையூ-றாக இருந்த முந்தைய நிலைகளை மாற்றி, கட்டுப்பாடுகளை விதித்து ஒழுங்கு நடவடிக்-கைகளை மேற்கொண்டது காவல்துறை. ஒழுக்கமாக நடக்க விரும்புபவர்கள் தானே ஒத்துழைப்பு நல்குவார்கள். வழக்கம்போல் மத நல்லிணக்கத்துக்கு குழி தோண்டும் விதமாக நடந்து கொண்டது இந்துத்துவ கும்பல். இத்தகைய ஊர்வலங்களின் போது மாற்று மதங்களைக் குறிவைத்து முழக்கங்கள் எழுப்பினார்கள் மதவெறியர்கள்.
புளியந்-தோப்பு பகுதியில் நடைபெற்ற பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தில் பிள்ளையார் பொம்-மைகளுக்குக் கீழே ஒழுக்கத்தின் உறை-விடமாக(!?) விளங்கி, மாட்டிக் கொண்டு சிறையில் கம்பி எண்ணிய நித்யானந்தா படத்தையும் வைத்து தூக்கிவந்தது ஒரு கும்பல்.. வாழ்க வாழ்க வாழ்கவே நித்யானந்தா வாழ்கவே என முழக்கம் எழுப்பியவாறு வெட்கமில்லாமல் வீதியில் வந்தனர். எண்ணற்ற இளம் பெண்களையும் ஆண்களையும் ஆசிரமத்தில் வைத்து, பிரம்மச்சரியத்தை போதித்துவிட்டு, தான் மட்டும் நடிகைகளுடன் படுக்கையறையில் நித்த நித்தம் ஆன்ம ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஒழுக்க சீலரான நித்யானந்தா வாழ்க! என முழங்கிய இவர்கள் தான் விநாயக பக்தர்கள், இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ-ஹிந்து பரிசத் கும்பல் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்த நேரத்தில் நாம் நினைவுகூர வேண்டிய மிக முக்கிய செய்தி உண்டு. இதே நித்யானந்தா வீடியோ ஆதாரங்களுடன் மாட்டிக் கொண்டு, மக்களின் வெறுப்பில் தூக்கி-எறியப்பட்ட போது இதே கும்பல் எப்படி நடந்து கொணடது என்பது தான் அது. நித்யானந்தாவின் ஆசிரமங்களுக்குள் புகுந்து சூரையாடியது, நித்யானந்தா இந்து-மதத்தின் சிறப்பைக் கெடுத்துவிட்டார் என்று ஆர்ப்பாட்டம் செய்தது, அவரது படத்தை செருப்பால் அடித்து, நெருப்பிட்டு எரித்து மக்களின் முன் நாடகம் ஆடியது.
இந்துத்து-வத்தின் தலைமைப் பீடங்கள் என்று தங்களைக் காட்டிக் கொள்-வோரிடமிருந்-தெல்லாம் வேகவேகமாக அறிக்கைகள் வெளியாயின. இத்தனையும் எவ்வளவு போலியானது என்பதை இந்தக் கும்பலின் முழக்கமும், நடவடிக்கைகளும் தெளிவாகக் காட்டுகின்றன. அது சரி, வல்லபையின் பெண்ணுறுப்பில் தும்பிக்கையை வைத்து உறிஞ்சி பிள்ளையார் செய்த ஆபாசத்தை விடவா நித்யானந்தா செய்துவிட்டார். பிள்ளையாருக்கு ஊர்வலம் நடத்தும் போது நித்யானந்தாவுக்கு வாழ்க கோஷம் போடு-வோரை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்களை அம்பலப்படுத்துவதே இப்போது நமது முதல் பணியாகும்.
நன்றி : விடுதலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment