
இதுக் குறித்து நிகழ்ச்சி ஏற்பாடுச் செய்த ஐ.டி.பியின் பொதுச் செயலாளர் ஸமீல் காசிம் தெரிவிக்கையில், மீர்வாய்ஸ் பேச துவங்கியவுடனேயே தாக்கப்பட்டார் என கூறுகிறார்.
ஐ.டி.பியின் இன்னொரு தலைவரான எஸ்.எஸ்.சன்யால் தெரிவிக்கையில், தாக்கியவர்கள் கஷ்மீரிகள் அல்லர் என்றார்.
கருத்தரங்கு நடைப்பெற்ற அரங்கில் நுழைந்த 10க்கும் மேற்பட்ட நபர்கள் மீர்வாய்ஸ் ஃபாரூக்கை தாக்க முற்பட்டவுடனேயே அங்கிருந்தவர்கள் அவரை
வன் முறையாளர்களிடமிருந்து பாதுகாத்துக் கொண்டனர்.
தாக்குதல் நடத்திய ஹிந்துத்துவ பயங்கரவாத பாசிஸ்டுகள் கல்வீச்சில் ஈடுபட்டதுடன், அங்கிருந்த பூத்தொட்டிகளை உடைத்தெறிந்தனர். இச்சம்பவம் நடைப்பெற்றவுடன் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி 20 பேரை போலீசார் கைதுச் செய்துள்ளனர்.
இக்கருத்தரங்கில் சிரோன்மணி அகாலி தளத்தின் பொதுச் செயலாளர் உள்பட
பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கலந்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment