
உலகம் முழுக்க உள்ள ஈழத் தமிழர்கள் இன்று மாவீரர் தினம் அனுஷ்டிக்கின்றனர். ஆண்டு தோறும் நவம்பர் 26 மற்றும் 27-ம் தேதிகள் ஈழத் தமிழருக்கு மிக முக்கியமானவையாகும். நவம்பர் 26-ம் தேதி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த தினமாகும். அதற்கு அடுத்த நாள் ஈழப் போரில் உயிர் நீத்த விடுதலைப் புலிகளை நினைவு கூறும் மாவீரர் தினமாகும். பிரபாகரன் தனது பிறந்த நாளைக் கொண்டாடாமல், மாவீரர் தினத்துக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், அமெரிக்கா முதல் நார்வே வரையில் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த தினத்தைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
1 comment:
வீர வணக்கங்கள்.
Post a Comment