Jul 9, 2010
கேரள பேராசிரியர் மீதான தாக்குதல்: PFI மீது புகார் - சுதந்திரதின அணிவகுப்பை தடுக்கும் மறைமுக யுக்தி.
கொச்சி:இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களைப் பற்றி முஸ்லிம்கள் சங்கடப்படும்படி வினாத்தாள் எழுதி சமீபத்தில் தாக்கப்பட்ட பேராசிரியர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது புகார் கொடுத்திருக்கிறார். இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக PFI நடத்திவரும் சுதந்திரதின அணிவகுப்புக்கு அனுமதியளிப்பதை போலீஸ் மறுபரீலனை செய்யலாம் என்றும் கருதப்படுகிறது.
டி.ஜி.பி ஜேக்கப் புன்னூஸ், "சமுதாயத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் பயந்தால் சுதந்திரதின அணிவகுப்பு தடுக்கப்படலாம், இவ்விஷயத்தில் போதுமான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் நேற்று கூறியுள்ளார்.PFI கடந்த சில ஆண்டுகளாக கேரளா, தமிழ்நாடு, கர்நாடகாவின் பல நகரங்களில் சுதந்திரதின அணிவகுப்பை நடத்திவருகிறது.
PFI க்கு எதிராக குற்றச்சாட்டுகளையும், கட்டுக்கதைகளையும் பரப்புவதை போலீஸ் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், PFI தலைவர் வீட்டில் ஆபாச பட சிடிக்கள், தேசவிரோத ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுவது தவறு என்றும் மாநில பொதுசெயலாளர் பி.அப்துல் ஹமீது கூறியுள்ளார். போலீஸின் இத்தகைய மனிதஉரிமை மீறல்கள் பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துகிறது. முஸ்லிம் சமுதாயத்தையும், PFI போன்ற பிரபல அமைப்புகளையும் அச்சமூட்டுவதற்காகவே போலீஸ் இப்படி செய்கிறது.
PFI யின் எர்ணாகுளம் மாவட்ட செயலாளர் குன்னத்தேரி மன்சூர் வீட்டிலிருந்து அவருடைய பாஸ்போர்ட், குர்ஆன் மொழிபெயர்ப்பு சிடிகள், தொலைபேசி புத்தகத்தை மட்டுமே எடுத்துச் சென்றுவிட்டு போலீஸ் வதந்திகளை பரப்புவதாக கூறுகிறார். PFI யின் அரசியல் கட்சியான SDPI வரும் செப்டம்பர் மாதம் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில் இந்த சூழல் பெரும்சவாலாக அமையும் என்று கருதப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment