கரூர்: தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை திராவிடர் கழகத்தின் தலைவராக்க நாங்கள் தயார். அதேபோல சங்கர மடத்தின் சங்கராச்சாரியாராக தலித் ஒருவரை ஆக்க அவர்கள் தயாரா என்று சவால் விட்டுள்ளார் தி.க. தலைவர் கி.வீரமணி.கரூரில் நடந்த திராவிடர் கழக வட்டார மாநாட்டில் கலந்து கொண்டு கி.வீரமணி பேசுகையில்,
பெரியார் மாநாடு நடத்துவார். அந்த மாநாட்டிற்கு விளம்பரப்படுத்தமாட்டார். அதற்கு அவர் நாம் விளம்பரத்படுத்த தேவையில்லை. எதிரிகள் விளம்பரப்படுத்துவார்கள் என்று கூறுவார். அதே போன்று தான் நம் எதிரிகள் இந்த மாநாட்டை போஸ்டர் அடித்து விளம்பரப்படுத்தி உள்ளார்கள்.
மண்டல மாநாடு வெற்றி என்பது கொள்கை வெற்றி என்று எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ் தெரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை என்று கேள்வி எழுப்பியவர் பெரியார். இந்துக்கள் ஒன்று சேர வேண்டும் என்று கூறுகிறார்கள்.அப்படியானால் பிரிந்து இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம். திராவிடர் கழகம் என்பது சமத்துவம் பேசும் இயக்கம் என்று எதிரிகள் கூறுகிறார்கள்.
சமத்துவத்திற்கு எதிராக இருக்கும் இந்து மதம் எதர்க்கு. ஜாதி இல்லாத இந்து மதம் உண்டா? அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று முதல்வர் அறிவித்தார். கலைஞர் தான் இந்துக்களை ஒன்று சேர்த்து உள்ளார். நெத்தி சுத்தம் என்றால் புத்தி சுத்தமாக இருக்கும் என்று பெரியார் சொன்னார்.இந்து மதத்தின் பெருமையை உலகத்திற்கு சொல்ல முடியுமா. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை திராவிடர் கழக தலைவராக அமர்த்த தயாரா என்று கேட்டு உள்ளார்கள். அதற்கு நாங்கள் தயார். ஆனால் ஒரு நிபந்தனை. காஞ்சி சங்கரமடத்தில் என்று தலித் குருவாக வருகிறாரோ அன்று நாங்கள் தயார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment