Jul 10, 2010
கால்பந்து ஆட்ட இறுதி போட்டியில் மோதும் ஸ்பெயின் & நெதர்லாந்து.
ஞாயிற்றுக் கிழமை (ஜூலை 11) மாலை ஜோஹன்னர்ஸ் பர்க் நகரின் சாக்கர் சிட்டி அரங்கத்தில் நடக்கவுள்ள இந்த இறுதிப் போட்டியோடு கடந்த ஒரு மாதமாக நடந்துவந்த கோலாகல கால்பந்து திருவிழா முடிவுக்கு வருகிறது. நடப்பு ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின் இதற்குமுன் உலகக் கோப்பை போட்டி இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்ததே இல்லை.நெதர்லாந்து அணியோ ஏற்கனவே 1974 மற்றும் 1978 என்று இரண்டு தடவை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி வந்திருந்தாலும், அது ஒரு தடவைக்கூட பட்டம் வென்றதில்லை. 1974ல் ஜெர்மனியிடமும் 1978ல் அர்ஜெண்டினாவிடமும் அந்த அணி தோற்க நேர்ந்திருந்தது. ஆகவே இந்த இரு அணிகளில் எந்த அணி கோப்பையை வென்றாலும், அந்த அணி கால்பந்தாட்டத்தின் புதிய உலக சாம்பியனாக வலம் வரும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment