Jul 11, 2010

போலீஸ் கைது நடவடிக்கை முன்பே தீர்மானிக்கப்பட்டது - பாப்புலர் ஃப்ரண்ட்.

கோழிக்கோடு : முஹம்மது நபியவர்களை அவமதிக்கும் விதமாக கேள்வித்தாள் தயாரித்த தொடுபுழா நியுமன் கல்லூரி பேராசிரியர் ஜோசப் தாக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டது தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வின் உறுப்பினர்களை காவல்துறை கைது செய்து வருவது முன்கூட்டியே திட்டமிடப்பட்டு தீர்மானிக்கப்பட்டுள்ளது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேரளா மாநில போதுச்செயலாளர் பி . அப்துல் ஹமீது குற்றம் சாட்டியுள்ளார்.

சர்ச்சைக்குரிய அவதூறான கேள்வித்தாள் தயாரித்து வெளியான பிரச்னையின்போது ஜனநாயக ரீதியான ஆர்பாட்டதின்மூலம் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தவர்களை காவல்துறை தற்போது குறிவைக்கிறது . பேராசிரியர் மீதான தாக்குதல் கொடூரமானது. அதே சமயத்தில் இத்தாக்குதல் ஏற்பட காரணமான சூழலை அரசு தடுக்க தகுந்த முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. லவ் ஜிஹாத் , முஸ்லிம் பெண்கள் முக்காடு அணியும் சர்ச்சை முஹம்மது நபியின்மீது அவதூறுப்பிரச்சரம் போன்ற பிரச்சினையில் கிருத்துவ தேவாலயங்களும் இயக்கங்களும் நியாயமற்ற அமைதி காத்தன. உலகெங்கிலும் வாழும் கோடிக்கணக்கான மக்களால் தங்களின் உயிரை விட மேலானதாக நேசிக்கும் முஹம்மது நபியவர்களின் மீது அவ்வப்போதும் தொடர்ச்சியாகவும் வன்முறையை தூண்டும் விதத்திலும் நாகரிகமற்ற விமர்சனங்கள் பிரசாரங்கள் செய்யப்படும்போது தேவையான நடவடிக்கைகள் எடுக்காமல் தற்போது கூக்குரலிடுவது அடிப்பப்டையற்றது முறையற்றது என்று கூறியுள்ளார்.

கேரளா மக்களிடையேயான சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளையும் வகுப்புவாத பிரச்சினையை ஏற்படுத்தும் நிகழ்வுகளை பற்றி பாப்புலர் ஃப்ரண்ட் போன்ற இயக்கங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி புகார்செய்து வந்திருக்கிறது ஆனால் இவற்றை அரசு கண்டுகொள்வதில்லை. அரசாங்கமும் பொதுமக்களும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் நிகழாவண்ணம் தடுக்க மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து செயல்படவேண்டும் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் தொண்டர்கள் மீது காழ்புணர்ச்சியுடன் காவல்துறை நடவடிக்கை எடுப்பதை கைவிடவேண்டும் என்று அப்துல் ஹமீது கோரிக்கை விடுத்துள்ளார்

No comments: