உலகின் அதிவேக காராக உருவெடுத்துள்ளது புகாட்டி வெய்ரான். இதன் வேகம் மணிக்கு 268 மைல்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பூமியிலேயே அதிவேகமான காராக இது அறிவிக்கப்பட்டுள்ளது. காரை ஸ்டார்ட் செய்து கிளம்பியதும் மணிக்கு 60 மைல்கள் என்ற வேகத்தை எட்ட இந்தக் கார் எடுத்துக் கொள்ளும் நேரம் வெறும் 2.5 விநாடிகள்தான். அதேபோல 124 மைல்கள் என்ற வேகத்தை எட்ட 7.3 விநாடிளையும், 186 மைல்கள் என்ற வேகத்தைப் பிடிக்க 15 விநாடிகளையும் மட்டுமே இது எடுத்துக் கொள்கிறது.
புகாட்டி கார் ஏற்கனவே கின்னஸ் சாதனையையும் மேற்கொண்டுள்ளது. அந்தக்காரை ஓட்டிய டிரைவர் பியரி ஹென்றி ரபேனல் அதிகபட்சம் மணிக்கு 265.9 மைல்கள் மற்றும் 269.8 மைல்கள் வேகத்தில் காரை ஓட்டி சாதனை படைத்துள்ளார். புகாட்டி வெய்ரான் சூப்பர்ஸ்போர்ட் கார், 8 எல் டபிள்யூ 16 என்ஜினில் இயங்குகிறது. இந்த என்ஜின் 12000 குதிரை சக்தியில் இயங்கக் கூடியதாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment