வாஷிங்டன்:அமெரிக்காவில் யூதர்கள் அதிகம் வசிக்கும் டீனெக் நகர மேயராக இந்திய அமெரிக்கரான முஸ்லிம் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.அவரது பெயர் முஹம்மது ஹமீதுதீன். ஆந்திர மாநிலம் ஹைதராபாத் தான் ஹமீதுதீனின் பூர்வீகம். இவர் நியூஜெர்சியில் உள்ள டீனெக் நகரின் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்த நகரில் யூதர்கள்தான் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் மேயர் பதவிக்கு வந்த ஒரு சில முஸ்லிம்கள் வரிசையில் ஹமீதுதீனும் இணைந்துள்ளார். கடும் போட்டிக்கு மத்தியில்தான் ஹமீதுதீன் மேயர் பதவிக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.2 ஆண்டுகளுக்கு முன்பு மாநகரசபை உறுப்பினராக வென்றவர் ஹமீதுதீன். ஜூலை 1ம் தேதி நடந்த கவுன்சில் வருடாந்திர கூட்டத்தில் இவருக்கு ஆதரவாக 5 வாக்குகள் கிடைத்தன. மொத்தம் உள்ள வாக்குகள் எண்ணிக்கை 7 ஆகும். துணை மேயராக யூதரான ஆடம் குஸ்ஸன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment